பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 செளந்தர கோகிலம்

அவருடைய அச்சத்தில் எவரும் அந்த வீட்டிற்கு வந்ததில்லை. அவர் போனதுதான் தாமசம். இந்த ஊரிலுள்ள சகலமான ஜனங்களும் அவர்கள் வீட்டுக்கு இரவு பகல் வித்தியாசமில்லாமல் வருவதும் போவதும் கூத்தடிப்பதுமாய் ஆரம்பித்துவிட்டனர். கிழவர் போன ஒரு மாச காலத்திற்குள் அது பெருத்த கள்ளுக்கடை போலாகிவிட்டது. பெண்ணைப்பற்றி பலவிதமான வதந்திகள் கிளம்பிவிட்டன. அப்படிக் கிளம்பவே, நான் நீ என்று அம்பட்டன் வண்ணான் முதலியோர்கூட அவர்களுடைய வீட்டுக்குள் நுழையவும் அவர்களோடு குலாவவும் ஆரம்பித்து விட்டார்கள். இந்த நிலைமையில் ஒருநாள் காலையில் அவர்களுடைய வீடு காலியாக இருந்தது. இரவோடிரவாய் அவர்கள் எங்கேயோ போய்விட்டார்களென்பது தெரிந்தது. கிழவருடைய ஸ்தாவர சொத்துக்களையெல்லாம் அவர்கள் சுமார் பதினைந்து நாள்களுக்கு முன்பே ஒரு பெரிய மிராசுதாரிடம் விற்றுவிட்டதாகவும் தெரிந்தது. அவர்களுடன் அன்னியோன் னிய சிநேகம் பாராட்டி வீட்டுக்குள் போய் வந்து கொண் டிருந்தவர்கள் எல்லோரும், “அவர்கள் எங்கே போய்விட்டார் கள்?’ என்று ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டார்களே யன்றி, அவர்கள் இன்ன இடத்துக்குப் போனார்களென்று சொல்லக் கூடியவர் ஒருவரும் இல்லை. ஆகையால் நான் இப்போது புதிதாக விசாரிப்பதற்கு எதுவும் பாக்கி இல்லை. விசாரித்தாலும், அதனால் உபயோகமே இல்லை’ என்றாள்.

அதைக் கேட்ட திவான் சாமியார் மிகுந்த சஞ்சலமும் கிலேசமும் அடைந்து, ‘அடாடா கிழவருக்குப் பிறகு அவர்களு டைய நிலைமை அப்படியா போய்விட்டது! நீங்கள் சொல்வதைப் பார்த்தால், இந்த ஊராருடைய உடத்திரவத்தைப் பொறுக்க மாட்டாமல் அவர்கள் எவருக்கும் சொல்லாமல் புறப்பட்டுப் போய் விட்டதாக அல்லவா எண்ண வேண்டி இருக்கிறது. அவர்கள் ஏழ்மை நிலைமையில் இருந்தவர்கள் என்றும், அவர்களுக்கு ஜனக்கட்டு இல்லையென்றும் கண்டு அவர்களுக்கு வந்து சேர்ந்த அபாரமான செல்வத்தைக் கண்டு பொறாமை கொண்டும் அதை அபகரிக்க எண்ணியும் இளம்பிராயப் பெண்ணைத் துன்மார்க்கத்தில் உபயோகப்படுத்திக் கொள்ள நினைத்துமே ஜனங்கள் அவர்களிடம் தாறுமாறாக