பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

470 செளந்தர கோகிலம்

இருந்தாலும் பரவா இல்லிங்க, ஒங்ககிட்ட எல்லா சங்கதியெயும் உள்ளது உள்ளபடி சொல்லிப்புட்றேனுங்க. நெசமாச் சொல்லுங்க அவுங்க எறந்து போயிட்டாருங்கற சங்கதிக்கிப் பொறவாலே வேறே எந்தச் சங்கதியும் ஒங்களுக்குத் தெரியாதா” என்றான்.

திவான் சாமியார், “இரண்டு வருஷத்துக்கு முன் அவர் இறந்து போய்விட்டார் என்ற விஷயத்தை நான் இந்த ஊரில் சுமார் இருடது தினங்களுக்கு முன்னேதான் தெரிந்து கொண்டேன். பல வருஷங்களுக்கு முன் நான் வடதேசங்களுக்கு யாத்திரை போய் இப்போதுதான் திரும்பி வந்தேன். வந்தவுடன் இந்த துக்க கரமான சங்கதி என் காதில் பட்டது. அவ்வளவுதான்’ என்றார். உடனே காத்தான் மிகுந்த விசனமும் சஞ்சலமும் த்வனித்த குரலில் பேசத் தொடங்கி ‘சாமீ; அந்த அதிசயத்தெ நான் என்னான்னு சொல்லப் போறேனுங்க! அந்த தருமராசா இருந்த இருப்பென்ன! அவுங்களுக்கு வந்த கயிஷ்ட காலம் என்ன! அக்கரமக் கொடுமெயெ நானு எப்பிடித்தான் வாயிலெவச்சு சொல்லப் போறேன் சாமீ” என்று கூறி மேலே பேசமாட்டாத வனாய்க் கண்ணிர் விடுத்துத் தேம்பித் தேம்பி அழத் தொடங்கி விட்டான்; அதைப் பார்த்த திவான் சாமியாருக்கும் துக்க மேலீட்டினால் மனதும் கண்களும் கலங்கிப் போயின. அவர் தமது அங்கியால் தமது கண்ணிலிருந்து வழிந்த கண்ணிரைத் துடைத்துக்கொண்ட வண்ணம், “அப்பா! காத்தான்! நீ விசனப் படுவதைக் காண, எனக்கும் என்னை மீறி விசனம் பொங்கு கிறது. இறந்துபோன ஐயா என்னுடைய பிராண சிநேகிதர் ஆகையால், அவரைக் குறித்து நீ இவ்வளவு தூரம் சங்கடப் படுவதைக் காண, எனக்கு உன்னிடத்தில் எவ்வளவு பிரியமும் மதிப்பும் உண்டாகின்றன தெரியுமா? காத்தான்! உன் விசனத்தை அடக்கிக்கொண்டு, சங்கதியைத் தெரிவி” என்றார்.

உடனே காத்தான், குஞ்சிதபாத முதலியார் திவானுக்குக் கூறிய வரலாறு முழுதையும் அப்படியே எடுத்துக் கூறிவிட்டு, அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய் மேலும் பேசத் தொடங்கி, ‘சாமீ! இந்த வவுத்தெரிச்ச சங்கதியைச் சொல்லும்பொளுதே என்னோடெ அங்கம் பதறுது சாe என் உசிரு போறாப்பலே இருக்குது எசமானே! அந்த மவராசரு இப்ப இந்த மண்ணு