பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 செளந்தர கோகிலம்

ஊருக்கு அழைத்துக்கொண்டு வருகிறேன். அப்போது நீ அவரைப் பார்த்து சந்தோஷப்படலாம். அவருடைய படம் ஒன்று என்னி டத்தில் பல வருஷகாலமாய் இருக்கிறது. அதை வேண்டுமானால் நான் உனக்கு இப்போது காட்டுகிறேன். பார்க்கிறாயா?” என்றார். அதைக்கேட்ட காத்தான் சகிக்கவொண்ணாத ஆவலும் பதைப்பும் தோற்றுவித்து, ‘சாe: அதெக் காட்டுங்க சாe: எங்கப்பனெக் கண்ணாலே பாக்கறேன். அந்த தர்ம தொரெயப் பார்க்கப் போறமான்னு எண்ணி எண்ணி எங்கண்ணு பூத்துப் போயிக் கெடக்குது சாe! காட்டுங்க சாமீ!” என்று நிரம்பவும் பதறி உருக்கமாகக் கேட்டுக் கொள்ள, திவான் சாமியார், அவனுக்குக் கொடுக்கும்பொருட்டு, தமது மூட்டையில் மேலாக எடுத்து வைத்திருந்த தமது தந்தையின் புகைப்படமொன்றை எடுத்து, அவனிடம் கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்த காத்தான், “ஆகா! ஐயோ! அப்படியே இருக்குதே! அவுங்க நேருலெ வந்து நிக்கிற மாதிரி இருக்குதே! கண்ணாலே பார்த்தாலும் கலி தீர்ந்துபோவுமே எங்கப்பன்: எம் மவராசன்! இப்ப நீ எந்த ஊருலெ இருக்கிறியோ நீ குடுத்த துணி இன்னும் எம் மேலே இருக்குதப்பனே! நீ போட்ட சாப்பாடுதானே இண்ணெக்கிம் நானும் எம்புள்ளெ குட்டிங்களும் சாப்பிட்றோம் யப்பா! மவராசா ஒனக்கு என்ன கோலம் வந்துடுச்சப்பா என் தொரெயே!” என்று கூறி படத்தைக் கண்களில் ஒற்றிக்கொண்டு ஆனந்தக் கூத்தாடிப் பூரித்துப் புளகாங்கிதமடைந்து கண்ணிர் சொரிந்து கோவென வாய்விட்டுக் கதறியழவே, அதைக் கண்ட திவானும் கலங்கிப் போய் விம்மி விம்மி அழத் தொடங்கி விட்டார். ஐந்து நிமிஷத்திற்குப் பிறகு காத்தான் திவானைப் பார்த்து, “சாமீ. நீங்க, இங்கிட்டே ரவெ நேரம் குந்திக்கிட்டு இருக்கறீங்களா. நானு ஒரே ஒட்டமாக ஓடி இதை எம்பொஞ்சாதி புள்ளையிங்களுக்குக் காட்டிப்புட்டுக் கொண்டாறேனுங்க. இதெப் பாத்தா அவுங்கெல்லாம் சந்தோஷத்துலே அப்பிடியே குதிப்பாங்க சாமீ’ என்று நயந்து பணிவாகக் கூறினான்.

திவான் சாமியார், ‘காத்தான்! என்னிடம் இதைப்போல இன்னொரு படம் இருக்கிறது. அதுவே எனக்குப் போதுமானது. இதைக் கண்டு நீ இவ்வளவு தூரம் சந்தோஷப்படுகிறபடியால், இதை நீ உன் வீட்டில் கொண்டுபோய் பத்திரமாய் வைத்துக்