பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சை கலெக்டர் தங்கமணி நாடார் 173

கொள். நீயும் உன் பென்ஜாதி பிள்ளைகளும் இதை எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கலாம்” என்றார்.

அதைக்கேட்ட காத்தான் பெருத்த குபேர சம்பத்தையே அடைந்தவன்போல விவரிக்க இயலாத அபாரமான களிப்பும் பூரிப்பும் அடைந்து மெய்ம்மறந்துபோய் திவான் சாமியாரை வாய் ஓயாமல் புகழ்ந்து வாழ்த்தத் தொடங்கினான்.

முடிவாக திவான் சாமியார், ‘அப்பா காத்தான், எனக்கு நேரமாகிறது. நான் போய்விட்டு வருகிறேன். இன்று ராத்திரி இந்த ஊரில் தங்கி, நாளைய தினம் காலையிலிருந்து, நான் ஊரூராய்த் தேடி இவரைக் கண்டுபிடிக்கத் தீர்மானித்திருக்கிறேன். இவர் பிழைத்துக் கொண்டது உன்னைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆகையால், இவர் சொல்லும் வரலாற்றை யாரும் உண்மையென்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆகையால், ஏதாவது சந்தர்ப்பம் வாய்க்குமானால் உனக்கு நான் செய்தி சொல்லியனுப்புகிறேன். நீ வந்து உண்மையான வரலாற்றைச் சொல்ல வேண்டும். பயப்பட்டுப் பின் வாங்கக்கூடாது; தெரிகிறதா?” என்றார்.

காத்தான், ‘'சாe: அதென்ன அப்பிடிச் சொல்லுறீங்க! நெசெத்தெப் பேச எனக்கென்ன பயஞ் சாமி! நானு திருடிப் புட்டேனா, மோசம் பண்ணிப்புட்டேனா நடந்ததெத் தானே சொல்லப் போறேன். நீங்க எங்ஙனே கூப்பிட்டுச் சொல்லச் சொன்னாலும், நானு சொல்லத் தடையில்லே எசமானே! இது சத்தியப் பிரமாணிக்கமான பேச்சு. எங்க கொல தெய்வம் மதுரைவீரன் சாக்கியாச் சொல்றேன். எம் உசிரு போறதானாலும், நானு பெறள மாட்டேனுங்க எசமானே’ என்று உறுதிமொழி கூறினான்.

அதைக்கேட்ட திவான் சாமியார் அவனிடம் முடிவாக விடை பெற்றுக் கொண்டு அவ்விடத்தை விட்டு ஊருக்குள் புகுந்து கோவிலுக்குப் போய் சாயரrை பூஜை சமயத்தில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு தாம் தங்கியிருந்த விட்டின் திண்ணைக்குப் போய்ச் சேர்ந்தார். அவரது வருகைக்காகக் காத்திருந்த அந்த வீட்டின் சொந்தக்காரியான பர்வதத்தம்மாள் அவரை உவப்போடு உபசரித்து உள்ளே அழைத்துப்போய்,