பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேதையே போதியோ பித்தனாய் விடுத்தெனை 17

விருத்தாப்பிய தசையில் தாம் கலியாணம் செய்துகொண்ட விஷயத்தைப் பற்றியும் காந்திமதியம்மாள் ராஜாபகதூர் ஆகிய இருவரையும் வரவழைத்த சமயத்தில் அவர்கள் காணாமல் போய்விட்டதைப் பற்றியும் தமது தந்தை சகிக்கவொண்ணாத கிலேசமும் சங்கடமும் அடைந்து தமது முகத்தில் விழிக்கவே விரும்பாமல் ஒருவேளை தமது உயிருக்கே ஹானி தேடிக் கொள்வாரோ என்று திவான் நினைத்தார். அவ்வாறு தமது தந்தையின் உயிருக்குத் தாம் ஹானி தேடுவதாவது, அவர் அந்தப் பெண்ணினிடம் எதிர்பார்த்த இல்லற வாழ்க்கையைத் தாம் கெடுப்பதாவது பரமபாதகமான செய்கைகள் என்று திவான் நினைத்தார். அதுவுமன்றி, அவரது பரிதாப்கரமான நிலைமையைக் கருதியோ, அவரது அபாரமான செல்வத்தைக் கருதியோ, தமது யெளவனப் பெண்ணை அவருக்கு மணம் புரிவித்தவர்களுக்கும், அந்தப் பெண்ணுக்கும் தாம் விசனம் உண்டாக்குவதும் பாவகரமான செய்கையென்று திவான் எண்ணினார். ஆகவே, தாம் இறந்து போனதாகவே தமது தந்தை நினைத்து அந்தப் பெண்ணோடு சந்தோஷமாக இருந்து, மிஞ்சியுள்ள தமது ஆயுட்காலத்தைக் கடத்தும்படி தாம் விட்டு விடுவதே தாம் செய்யத்தக்க காரியமன்றி, ஒருவாறு அமைதி அடைந்துள்ள தமது தந்தையின் மனம் மறுபடி சஞ்சலமடைந்து புண்படும்படிச் செய்வது முற்றிலும் தகாத செய்கையென்று தீர்மானித்துக் கொண்டார். ஆயினும், தாம் தமது தந்தையின் திருவுருவத்தைத் தூரத்தில் இருந்தாகிலும் ஒரு தடவை மனங்குளிரப் பார்க்கவேண்டுமென்ற ஆசை அவரைத் தூண்டியது. ஆனாலும், அவராகிலும், தம்மோடு அதற்குமுன் பழகிய வேறு மனிதர் எவராகிலும் தம்மைப் பார்த்துத் தமது அடையாளத்தைக் கண்டு கொண்டால், அந்தக் கலியாணச் சந்தோஷம் உடனே சீர்குலைந்து போகுமென்று நினைத்தே திவான் அந்த இடத்தையும் ஊரையும் விட்டு உடனே அவசரமாய் வேறு ஊருக்குப் பிரயாணமாகிவிட்டார். தாம் காசி முதலிய rேத்திரங்களுக்குப் போய்விட்டு மறுபடி திரும்பிவந்து தமது தந்தையைப் பார்த்து ஆநந்திக்கலாம் என்று திவான் முடிவாகத் தீர்மானித்துக் கொண்டார். இப்போது தாம் தமது தந்தையைப் பார்த்தால், அது தமக்கு மாத்திரம் சந்தோஷமாக செ.கோ..!!!-2