பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சை கலெக்டர் தங்கமணி நாடார் 233

ஏமாற்றமும் அடைந்தவராய் இருந்தனர். சுமார் ஒருமாத காலம் கழிந்து போயிற்று. எந்த ஊரிலிருந்தும் எவ்விதமான தகவலும் வந்து சேரவில்லை. கமலவல்லி தனது கற்பு நிலைமையிலிருந்து தவறாமல் இருந்தால் மாத்திரம் தாம் அவளை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று அவர்கள் எண்ணியிருந்தார்கள் என்பதை நாம் இங்கு குறிப்பிடுவது மிகையாகும். அவள் ஒரு கால் தனது கற்பு நிலையில் தவறிப் போனதால், தம்மிடம் வர விருப்பங்கொள்ளாது எவ்விடத் திலாயினும் ஒளிந்து கொண்டிருக்கிறாளோ அல்லது தம்மைக் குறித்து சென்னை துரைத்தனத்தார் வெளியிட்ட உத்தரவு அவள் வரையில் எட்டாமல் இருக்குமோ அல்லது அவள் இந்தியாவிலேயே இல்லாமல் அக்கரைச் சீமைக்குப் போயிருப்பாளோ என்று தந்தையும் புதல்வரும் பலவாறு ஐயமுற்றுத் தவித்தவராய் இருந்தனர். தாம் எப்படியும் கமலவல்லியின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து அவள் என்ன நிலைமையில் இருக்கிறாள் என்பதை அறிந்துவிட வேண்டுமென்ற தீர்மானத்தைச் செய்து கொண்டவர்களாய், தாம் அதற்குமேல் எவ்விதமான நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம் என்பதைப்பற்றி இருவரும் இரவு பகல் எண்ணமிட்டுக் கொண்டிருந்தனர்.