பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 செளந்தர கோகிலம்

வேறு பல இடங்களுக்கெல்லாம் போய் அலைந்துவிட்டு இவ்வளவு நாழிகை கழித்து வந்தீர்களே. அவர்களுடைய வீட்டை விட்டு வந்த பிற்பாடு உங்கள் மனசில் கோகிலா பங்களாவுக்கு வந்திருக்க மாட்டாள் என்ற சந்தேகம் எப்படி உண்டாயிற்று?’ என்றாள்.

அவள் அவ்வாறு கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்த தருணத்தில் ஒரு வேலைக்காரன் ஓடிவந்து செளந்தரவல்வி யம்மாளின் காதண்டை முகத்தை நீட்டி, “அம்மா ராயபுரத் திலிருந்து பொன்னுரங்க முதலியார் வந்திருக்கிறார்கள். அவர்களைத் தனியான ஒரு விடுதியில் உட்கார வைத்திருக் கிறேன்” என்று ரகஸியமாகக் கூறினான்.

அதைக் கேட்டவுடன், செளந்தரவல்லியம்மாள் திடுக் கிட்டுப் போனவள் போலக் காட்டிக்கொண்டு அவனை நோக்கி வாய்விட்டு உரத்த குரலில் பேசத் தொடங்கி, “ஆகா! அப்படியா ராயபுரத்திலிருந்து அந்த முதலியாரும் வந்திருக்கிறார் களா! நான் அனுப்பிய ஆள்கள் தாமாகவே அந்த ஐயாவின் வீட்டுக்கும் போய்ச் சொல்லியிருந்தாலும் இருக்கலாம். அல்லது அவர்களுக்கே வீட்டில் இருக்கை கொள்ளாமல், அம்மாள் புறப்பட்டு வந்த பிற்பாடு தாமும் வீட்டை விட்டுப் புறப்பட்டுக் கோகிலாம்பாளைத் தேடிக் கொண்டு இங்கே வந்திருக்கலாம். சரி, போய் அவர்களையும் இவ்விடத்துக்கு அழைத்துக்கொண்டு வா. ஏன் அவர்களை வெளியில் நிற்க வைக்கிறாய்? நம்முடைய சொந்த ஜனங்கள் உள்ளே வருவதற்குக் கூட எங்களுடைய அனுமதி கேட்க வேண்டுமா? போ சீக்கிரம்” என்றாள். உடனே அந்த வேலைக்காரன் வெளியில் போய் விட்டான்.

இராயபுரம் பொன்னுரங்க முதலியார் அங்கு வராமல் அந்த மகா முக்கியமான சந்தர்ப்பத்தில் நிரம்பவும் அசட்டையாக இருந்து விட்டாரென்ற எண்ணத்தினால், உறவினருள் சிலர் அவர்மீது அருவருப்படைந்திருந்தனர்; சிலர் அவரே பெண்ணுக்கு ஏதேனும் தீங்கிழைத்திருப்பாரோ வென்று சந்தேகித்திருந்தனர். அவர் பூஞ்சோலையம்மாளையே வரும்படி கடிதம் எழுதினார். ஆதலால், கோகிலாம்பாளுக்குக் கெடுதல் செய்ய வேண்டுமென்று அவர் கருதியிருக்க மாட்டாரென்றும், அவள் காணாமல் போனது அவரால் நடந்த காரியமல்லவென்றும் மற்றும் சிலர் தமக்குத்