பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 செளந்தர கோகிலம்

இருந்தாலும், இந்த வீட்டு அம்மாள் பொய் சொல்லுகிறவளல்ல. பொன்னுரங்க முதலியாரின்மேல் அபாண்ட பழிபோட வேண்டுமென்று அவர்கள் ஒரு நாளும் எண்ண மாட்டார்கள். இவர்கள் தெளிவடைந்து, நமக்கு முன்னிலையில் எவ்விதமாக தகவலைச் சொல்லுகிறார்களோ அது உண்மையாத்தான் இருக்க வேண்டுமேயன்றி பொய்யா இராது. பெண் பொன்னுரங்க முதலியாருடைய வீட்டுக்குத்தான் போனது என்று இவர்கள் நமக்கெதிரில் இப்போது சொல்லிவிடும் பrத்தில், அதுவேதான் வேத வாக்கியம். பிறகு பொன்னுரங்க முதலியார் கோகிலாவைக் கொணர்ந்து ஒப்புவித்தே தீரவேண்டும்” என்று நிரம்பவும் கண்டிப்பாகவும் அழுத்தமாகவும் கூறினார். உடனே பொன்னுரங்க முதலியார், “சரி, அப்படியே செய்யுங்கள். இந்த வீட்டு அம்மாள் மாத்திரம் என் மேல் நேருக்கு நேர் இந்தக் குற்றத்தைச் சுமத்தும் பrத்தில், நீங்கள் என்னை எவ்விதமான தண்டனைக்கும் உட்படுத்தலாம். இந்த வீட்டு எஜமானியம்மாள் தெளிவடைந்து பேசுவதற்கு எவ்வளவு நாழிகை ஆனாலும் சரி நாங்கள் இருக்கிறோம்’ என்றார்.

அவ்வாறு அவர்கள் அவ்விடத்தில் ஒருவரோடொருவர் சச்சரவு செய்துகொண்டிருந்த சமயத்தில், ஒரு வேலைக்காரன் செளந்தரவல்லியண்டை மெதுவாக வந்து நெருங்கி, ‘அம்மா! உங்கள் தமக்கை வந்துவிட்டார்கள்’ என்று ரகளிலியமாகக் கூறினான். அதைக்கேட்ட செளந்தரவல்லி, “சரி, சந்தோஷம்: அவள் இப்போது எங்கே இருக்கிறாள்?’ என்றாள். வேலைக் காரன், நீங்கள் சொன்னபடி தனியான ஒரு விடுதியில் அழைத்துக் கொண்டுபோய் வைத்திருக்கிறேன்” என்றான். செளந்தரவல்லி, “என்ன காரணம் சொல்லி அங்கே அழைத்துக் கொண்டு போனாய்?” என்றாள். வேலைக்காரன், “உள்ளே யாரோ சில பெரிய மனிதர்கள் வந்திருக்கிறார்கள் என்றும், அவர்கள் போகிற வரையில் மறைவாயிருக்கும்படி நீங்கள் சொன்னதாகவும் சொல்லி அங்கே அழைத்துக் கொண்டு போனேன்’ என்றான். செளந்தரவ்லலி, “சரி, நல்ல காரியம் செய்தாய். இங்கே நம்முடைய சொந்த ஜனங்கள் இன்னின்னார் வந்திருக்கிறார்களென்பது அவளுக்குத் தெரியாதே?” என்றாள். வேலைக்காரன், ‘தெரியாது” என்றான். இவ்வாறு அவர்கள்