பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்குற்றம் கோடிக் கேடு - பிரயாச்சித்தம் 273

யும் அடைந்து இடிந்து குன்றி அப்படியே உட்கார்ந்து போய் விட்டாள். கோகிலாம்பாளது மனநிலைமையை நாம் கூறுவதைவிட யூகித்துக் கொள்வதே எளிதென்று எண்ணுகிறோம். தான் இன்ஸ்பெக்டருடைய வீட்டிற்குள் போய் வந்ததைப் பற்றி அவர்களுக்குத் தான் திருப்திகரமான எவ்விதச் சமாதானம் கூறுகிறது என்பதை அறியாமல் அவள் முற்றிலும் சோர்ந்து சில நிமிஷநேரம் அப்படியே உயிரற்ற பதுமைபோலாய்விட்டாள்.

அதுதான் சமயமென்று கண்ட செளந்தரவல்லி இன்னொரு தந்திரம் செய்தாள். தனக்குப் பக்கத்திலிருந்த வேலைக்காரியிடம் கொடுத்து வைத்திருந்த ஒரு கடிதத்தை அவள் அப்பொழுதே கண்டெடுத்துக் கொணர்ந்து கொடுப்பதுபோல நடிக்கச் செய்து, அதைத் தனது கையில் வாங்கி மிகுந்த வியப்பும் ஆவலும் கொண்டவள் போல நடித்து, “இதோ அந்தக் கடிதமும் அகப் பட்டுப் போய்விட்டது. இதை நான் படிக்கிறேன். எல்லோரும் கேளுங்கள். இதை யார் எழுதியது என்கிற உண்மை இப்பொழுதா வது விளங்கிப் போகும். இப்போது ஒருவர் மேலொருவருக்கு ஏற்பட்டிருக்கிற சம்சயமும் உடனே நீங்கிப் போகும்” என்று கூறிய வண்ணம், மற்றவர் அதற்கு என்ன மறுமொழி கூறப் போகிறார்கள் என்பதை எதிர்பார்க்காமல் கடிதத்தைப் பிரித்து மடமடவென்று படிக்கத் தொடங்கினாள். அந்தக் கடிதம் கண்ணபிரான் சிறைச்சாலையிலிருந்து கோகிலாம்பாளுக்கு எழுதியதென்பதை நாம் மறுபடி குறிப்பது அநாவசியம். கடிதத்தின் உள் விவரம் முன்னோரிடத்தில் வந்திருக்கின்றது. அந்தக் கடிதத்தை செளந்தரவல்லி கணிரென்ற குரலில் விரைவாகப் படித்து முடித்தாள். தான் தனது அக்காளின் முகத்தையாவது, அம்மாளின் முகத்தையாவது பார்த்தால், அதைப் படிக்க வேண்டாமென்று அவர்கள் சைகை செய்வார் களென்றும், அதை மீறித் தான் படித்தால் தான் வேண்டுமென்றே எல்லா ஏற்பாடுகளையும் செய்ததாகத் தன்மீது சம்சயம் கொள் வார்கள் என்றும் நினைத்து அந்தக் கடிதம் முடிகிறவரையில் வேறு எந்தத் திக்கிலும் தனது பார்வையைச் செலுத்தாமல் செளந்தரவல்லி தான் நடிக்க உத்தேசித்திருந்த கபட நாடகத்தை முடிவு வரையில் நடித்துப் பூர்த்தி செய்துவிட்டு, முற்றிலும் வியப்பும் கலக்கமும் அடைந்தவள் போலத் தோன்றி, “என்ன செ.கோ.H-48