பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 செளந்தர கோகிலம்

நடந்து கொள்ளுவாளோ என்றும் தங்களை நிரம்பவும் இளக்காரமாக மதித்து தூஷணையான சொற்களை உபயோகிப் பாளோவென்றும் நினைத்துப் பெரிதும் கவலைகொண்டு அஞ்சிக் கலங்கித் தவித்திருந்தனர்.

ஆனால் புஷ்பாவதி அதற்குமுன் அவர்களிடம் காட்டியதை விடப் பன்மடங்கு அதிகமான வாஞ்சையும், உரிமையும், பரிவும், இரக்கமும் காண்பித்து நிரம்பவும் நயமாக அவர்களை உபசரித்து அவர்களிருவரும் ஸோபாவின்மீது செளகரியமாக உட்கார்ந்து கொள்ளச் செய்ததன்றி அவர்கள் சிறிதும் எதிர்பாரா விதமாக அவர்களிடம் கரைகடந்த அன்பும் பட்சமும் காட்டிப் பேசவே, அதைக் கண்ட மற்ற இருவருக்கும் மனம் ஒருவாறு நிலைக்க ஆரம்பித்தது. அவர்களது தேகமும், மனதும் ஸ்திமிரப்படத் தொடங்கின. அவர்களது இயற்கையான நிலைமையும், மனத் தெளிவும், அமைதியும் மறுபடி தோன்றலாயின. அதைக் கண்ட புஷ்பாவதி அவர்கள் இருவரையும் நோக்கி நிரம்பவும் பரிவாகவும், உருக்கமாகவும் பேசத் தொடங்கி, “என்ன கால வித்தியாசம் இது! பட்ட காலிலேயே படும்; கெட்ட குடியே கெடும் என்பது சரியாயிருக்கிறதே, மனிதர் ஏற்கெனவே புண்பட்டுக் கிடக்கையில், மேன்மேலும் மனம் புண்ணாகத் தக்க காரியங்களே நேருகின் றனவே! அதுவுமல்லாமல் நாம் கெட்ட வழியில் போக வேண்டு மென்று சொப்பனத்திலும் எண்ணாமல், ஒழுங்கான வழியிலேயே நடந்து கொண்டு போகையில், நாம் எதிர்பார்க்காத இடிகள் வருகின்றனவே! அதை என்னவென்று சொல்லுகிறது! நீங்கள் இருவரும் சன்மார்க்க நெறியைவிட்டு ஒரு மயிரிழையும் தவறி நடக்கக் கூடியவர்களன்று; கெட்ட காரியம் எதையும் மனசால் கூட நினைக்கிறவர்களன்று. அப்படி இருந்தும், கால வித்தியாசம் இப்படித் தாறுமாறாக வந்துவிடுகிறதே! கோகிலாம்பாள் எப்படியும் கண்ணபிரான் முதலியாரைத்தான் கட்டிக்கொள்ள வேண்டுமென்று உங்களுக்குள் முடிவான தீர்மானம் ஏற்பட்டுப் போயிருக்கிறது. அவர் கடிதம் எழுதினார். அவரிடம் உங்களுக்கு ஏற்பட்டிருந்த அளவு கடந்த பிரியத்தினால் நீங்கள் கோகிலாவை அனுப்பினர்கள். அவர் பொது ஸ்தலமான போலீஸ் கச்சேரியில் இருக்கிறார். அவ்விடத்திற்குக் கோகிலா போனால், அவளுக்கு யாரும் எவ்விதமான கெடுதலும் செய்துவிட முடியாது.