பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்குற்றம் கோடிக் கேடு - பிரயாச்சித்தம் 275

அவர்களது அவமானமும், இழிவும் ஆயிரமடங்கு அதிகமாய்த் தோன்றின. மனிதர் தவறிக் கீழே வீழ்ந்தவுடன், தங்களது உடம்பில் ஏற்படும் காயங்களையும், அதனால் உண்டாகும் துன்பத்தையும் கவனியாமல் அருகில் வேறு மனிதர் எவரேனும் இருக்கின்றனரோ என்பதையே முதலில் கவனிப்பது உலக இயல்பு. தங்களுக்கு ஏற்படும் அவமானத்தைவிட, அதைப் பிறர் கவனிப்ப தாகிய அவமானமே அதிகமாய் உறைப்பது சகஜமாதலால், அன்னிய மனிஷியும், தங்களை நிரம்பவும் கண்ணியமாக மதித்துள்ளவளும், தங்களுடன் கலியாண சம்பந்தம் செய்து கொள்ளப் போகிறவளுமான புஷ்பாவதி அந்தச் சமயத்தில் அவ்விடத்தில் இருந்ததே அவர்கள் இருவருக்கும் பெருத்த துன்பமாக இருந்தது. யார் என்ன பேசுவது என்பது உணராமல் இருவரும் அயர்ந்து தளர்ந்து செயலற்று கால் நாழிகை நேரம் அப்படியப்படியே கற்சிலைகள் போல நின்று விட்டனர். - புஷ்பாவதி தானும் மற்றவர்கள் செய்ததுபோல அந்தச் சமயத்தில் அவர்களை விடுத்துப் போய்விடுவது உசிதமல்ல வென்றும், தாம் கருதியிருந்த கபட நினைவு பலிதமாகப் போகிற தருணத்தில் தான் அவ்விடத்திலேயே இருந்து தமது கோரிக் கையைப் பூர்த்தியாக நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமென்றும் நினைத்ததன்றி, தன்மீது அவர்கள் சிறிதும் சந்தேகம் கொள்ளாமல் இருக்குமாறு தான் நிரம்பவும் தந்திரமாக நடந்துகொள்ள வேண்டு மென்றும் தனக்குள் தீர்மானம் செய்து கொண்டாள். தனது புதல்வியான கோகிலாம்பாளுக்கு இன்ஸ்பெக்டரது வீட்டிற்குள் என்ன விதமான அபாயம் நேரிட்டதோவென்பதைக் கேட்டறிய வேண்டுமென்ற ஆவல் பூஞ்சோலையம்மாளது மனதில் எழுந்து தூண்டிக் கொண்டிருந்தது. தனது தாய் ஒரு வேளை கண்ணபிரர்னைக் கண்டு அவனுடன் சம்பாவித்து, அவன் கடிதமெழுதித் தன்னை வரவழைத்த முகாந்தரம் என்ன வென்பதைத் தெரிந்து கொண்டு வந்திருப்பாள். ஆதலால், அதைக் கேட்டறிய வேண்டுமென்ற ஆவல் கோகிலாம்பாளின் மனத்தில் துடித்துக் கொண்டிருந்தது. ஆயினும் அப்பொழுது அவ்விடத்தில் புஷ்பாவதி இருந்ததைக் கருதி அவர்கள் தங்களது ஆவலை அடக்கிக் கொண்டதன்றி, அவ்விடத்தில் தங்களுக்கு நேரிட்ட இழிவைக் கண்ட புஷ்பாவதி தங்களிடம் எவ்விதமாக