பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்குற்றம் கோடிக் கேடு - பிரயாச்சித்தம் 277

அவ்விடத்தில் அவளுக்கு எவ்வித இழிவும் நேர்ந்துவிடப் போகிறதில்லை. பெண் தைரியசாலியா யிருந்தால், அங்கே போய் வருவதில் எவ்விதமான கெடுதலுமில்லை. ஆனால் கலியான மாகாத யெளவனக் குமரி தனிமையில் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் தனக்கு வரிக்கப்பட்டிருக்கும் புருஷருடன் பேசினா ளென்றால், அது பார்ப்பதற்கு விகாரமாக இருக்கு மென்ற எண்ணத்தினால் நீங்கள் அதை ஒரு விதமாக மறைத்துச் சொன்னீர்கள். அதில் தப்பிதம் என்ன இருக்கிறது. ஒன்றுமில்லை. என்னிடம்கூட நீங்கள் இப்படி மாற்றிச் சொன்னிர்களே என்ற எண்ணங்கூட என் மனசில் உண்டாகவில்லை. இவ்விதமான சங்கதிகளை உள்ளபடி வெளியிட லஜ்ஜைப்படுவது சர்வ சகஜமான விஷயமே. மானத்தில் கண்ணும் கருத்தும் உடைய மனிதர் யாரும் இப்படித்தான் நடந்து கொண்டிருப்பார்கள். ஆனால், நாம் யாரும் எதிர்பாராத விதமாக உங்களுடைய பந்து ஜனங்களெல்லோரும் இங்கே வந்து கும்பலாகக் கூடியதனால் அல்லவா, காரியம் விகாரமாகி விட்டது. உங்களுடைய வேலைக் காரர்கள், நிரம்பவும் அவசரப்பட்டு அவர்களைக் கூட்டிக் கொண்டு வந்துவிட்டார்கள். ஆனால் நாம் அவர்களுடைய நிலைமையையும் எண்ணிப் பார்த்தால் அவர்கள் உங்களிடம் வைத்திருக்கும் பிரியத்தினாலும் பட்சத்தினாலும் அவர்கள் போய் மற்றவர்களிடம் இதைச் சொல்லி இருக்கிறார்களென்றே நினைக்க வேண்டியிருக்கிறது. ஆகையால் நாம் அவர்களைக் கண்டிப்பதற்கும் இல்லை. இதெல்லாம் கால வித்தியாசத்தினால் ஏற்பட்டதென்றுதான் நாம் சொல்ல வேண்டும். இன்று கோகிலாவுக்கும், உங்களுக்கும் நிரம்பவும் பொல்லாத வேளை யென்றே நினைக்கிறேன். இன்னம் ஏதோ பெருத்த அபாயம் நேரவேண்டியது. அது இவ்வளவோடு விட்டுவிட்டது. இல்லா விட்டால், சிப்பாயிகளிடத்தில் அகப்பட்ட பெண் மீண்டு வருவ துண்டா? அதுவும் கோகிலா எவ்விதமான களங்கமுமில்லாமல் திரும்பி வந்திருப்பதைப் பார்த்தால், இன்று மலைபோல வந்த ஆபத்து பணிபோல விலகிப் போயிருக்கிறது” என்று நிரம்பவும் நயமாகத் தேனொழுகுவது போலக் கூறினாள்.

அவள் தங்களிடம் அவ்வாறு சர்வ சாதாரணமாக நடந்து கொள்வாள் என்பதை அவர்கள் இருவரும் சிறிதும் எதிர்பார்த்தவர்