பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 செளந்தர கோகிலம்

இவ்வளவு அவ்வளவு என்று சொல்லமுடியாது. உன்னுடைய ஸ்ரஸகுணமும், பெரும்போக்கான புத்தியும், உல்லாசமான இயல்பும், மனிதரிடம் ஒட்டிக்கொண்டு வாஞ்சையாக இருக்கும் தன்மையும் எங்கள் மனசுக்கு ஒத்தாற்போல இருப்பதால், என் தமையனார் உன்னையே கட்டிக்கொள்ள வேண்டுமென்று நாங்கள் முடிவு செய்துவிட்டோம். இனி சூரியன் தெற்கு வடக்காகப் போனாலும் அந்தத் தீர்மானம் மாறப்போகிற தில்லை. இருந்தாலும், இடையிடையில் இவர்கள் தாறுமாறாக நடந்துகொள்வதுதான் எங்களுடைய கண்ணியத்தை நிரம்பவும் பாதிக்கக் கூடியதாக இருக்கிறது. நேற்றிரவோடுதான் அந்தக் கற்பகவல்லியம்மாள் போய்விட்டாளே. அதோடு இவர்கள் அவர்களுடைய நினைவை விட்டொழித்துவிட்டு, கோகிலாம் பாளுக்கு வேறே தக்க இடம் பார்க்கக்கூடாதா? காலையில் எழுந்தவுடன் இவர்களுக்கு யாரோ ஒரு கடிதம் எழுதியிருக் கிறார்கள். அதைப் பார்த்தவுடன் கோகிலாம்பாள் புறப்பட்டு ஒடி இருக்கிறாள். அநேகமாய் அது கண்ணபிரான் சம்பந்தமான விஷயமாகத்தான் இருக்கவேண்டுமென்பது என்னுடைய தமையனாரின் அபிப்பிராயம். இவர்கள் இதோடு கண்ண பிரானை மறந்து போவதானால்தான் இன்று என் தமயனார் வருவார். இல்லையானால், உங்கள் இருவருக்கும் சந்திப்பு ஏற்பட இன்னம் கொஞ்ச காலம் பிடிக்கும்’ என்றாள்.

அதைக் கேட்ட செளந்தரவல்லியம்மாளின் மனத்தில் இன்பமும் துன்பமும் மாறி மாறித் தோன்றி அவளைச் சகிக்க வொண்ணாத சஞ்சலக்கடலில் ஆழ்த்தின. சுந்தரமூர்த்தி முதலியார் தன்னை மணக்கும் விஷயத்தில் அவள் உறுதி கூறியது பெருத்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஆனாலும், தனது தாய் அக்காள் ஆகிய இருவரது துர்நடத்தையினால், தனக்கு அன்றைய இரவில் கிடைக்குமென்று தான் மிகுந்த ஆவலோடும் ஆசையோடும் எதிர்பார்த்த சந்திப்பும் ஆநந்தமும் கிடைக்காமல் போய்விடும் போலிருக்கின்றனவே என்ற நினைவு சகிக்க வொண்ணாத அபாரமான துயரத்தையும் சஞ்சலத்தையும் ஏக்கத்தையும் உண்டாக்கின. ஆயினும் அவள் முற்றிலும் பரிதாபகரமான தோற்றத்தோடு புஷ்பாவதியை நோக்கி