பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோக முஷ்கரம் 35

கூறப்பட்டப்படி பிற்பகல் நான்கு மணிக்குப்பிறகு டெலிபோன் யந்திரம் ஒலித்த காலத்தில் செளந்தரவல்லியம்மாள் தனது சயனக் கிரகத்தில் பலவகைப்பட்ட எண்ணங்களினாலும் ஆவலினாலும் வதைப்பட்டுப் படுத்திருந்தாள். தனது தாய் கோகிலாம்பாளைத் தேடும்பொருட்டு புறப்பட்டுப் போயிருக்கிறாளென்றும், புஷ்பாவதியம்மாள் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறாள் என்றும் வேலைக்காரியின் மூலமாய்த் தெரிந்துகொண்டும், புஷ்பாவதியம்மாள் எப்போது விழித்து எழுந்திருப்பாள் என்ற ஆவலுடன் சயனித்திருந்தவள், டெலி போனின் ஒசையைக் கேட்கவே, அவளுக்குக் கோகிலாம்பாளைப் பற்றிய நினைவே உண்டாயிற்று. அவள் பங்களாவுக்குத் திரும்பி வராமல் அவ்வளவு காலம் வெளியில் தங்க நேர்ந்ததைப் பற்றித் தங்களது தாய்க்கு ஏதேனும் சமாதானம் சொல்லுவதற்காக அவள் எங்கிருந்தாவது அழைக்கிறாளோ என்ற எண்ணம் தோன்றியது. அவள் தனது அக்காளிடம் கொண்டிருந்த அருவருப்பும், கோபமும் உடனே அபாரமாய்ப் பெருக ஆரம்பித்தன. அவளுடன் தான் பேசுவது தகாதென்ற rாத்திர நினைவும் வெறுப்பும் தோன்றின. ஆகவே, அவள் அலட்சியமாக ஒரு வேலைக்காரியை அழைத்து, ‘அடி ஜெயா டெலிபோனில் யாரோ பேசக் கூப்பிடுகிறார்கள். போய்ப்பேசி, யார் கூப்பிடுகிறார்கள் என்பதையும், விஷயம் என்ன என்பதையும் தெரிந்துகொண்டு வா’ என்றாள்.

உடனே அந்த வேலைக்காரி டெலிபோனண்டை சென்று அதை எடுத்துவைத்துக்கொண்டு பேசிவிட்டு உடனே செளந்தர வல்லியம்மாளை நோக்கி அவசரமாய் பேசத்தொடங்கி, ‘அம்மா மயிலாப்பூரிலுள்ள ஜெமீந்தார் ஐயா புஷ்பாவதியம்மாளுடன் பேசவேண்டுமாம். அவர்களை டெலிபோனண்டை அனுப்பும் படிச் சொல்லுகிறார்கள்’ என்றாள்.

அதைக் கேட்ட செளந்தரவல்லியம்மாள் திடுக்கிட்டெழுந்து உட்கார்ந்துகொண்டு, ‘ஆ மயிலாப்பூரிலிருந்து அவர்களா கூப்பிடுகிறார்கள் புஷ்பாவதியம்மாளையா கூப்பிடுகிறார்கள்!’ என்று ஓங்கிய குரலில் வியப்பாகக் கூறினாள். அப்போது புஷ்பாவதியம்மாள் அந்த மகாலுக்குப் பக்கத்திலிருந்த