பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 செளந்தர கோகிலம்

வழியாய்ப் பேசுவார்களோ மாட்டார்களோ அல்லது அதற்குள் அம்மாள் திரும்பி வந்துவிட்டால் அதுவும் இடைஞ்சலாகப் போகும்’ என்றாள்.

புஷ்பாவதி, “என் தமயனார் இவர்களைப் பற்றிப் பல தடவை ஆவலாய்க் கேட்டார். ஆகையால் இதை நிச்சயமாய்த் தெரிந்துகொள்ளுகிறவரையில் அவர் சும்மா இருக்கமாட்டார். ஆகையால், அவர் மறுபடி அவசியம் பேசுவார் என்றே நம்புகிறேன். அவர் பேசாவிட்டால், நானாவது அவரை டெலிபோன் மூலமாய்க் கூப்பிட்டு அவருடன் பேச்சுக் கொடுத்து, நடுவில் நான் விலகிக்கொண்டு உன்னைவிட்டு விடுகிறேன். நீ பேசலாம். உன் அம்மாள் முதலியோர் வந்தாலென்ன? நான் எப்படியாவது தந்திரம் செய்து அவர்களை அப்பால் அழைத்துக்கொண்டு போய்விடுகிறேன். அப்போதும் நீ பேசலாம்” என்றாள்.

அந்த ஏற்பாட்டையும் செளந்தரவல்லியம்மாள் மகிழ்ச்சி யோடு ஆமோதித்தாள். அதன் பிறகு அவர்கள் இருவரும் சந்தோஷமாகவும் வேடிக்கையாகவும் வெகுநேரம் வரையில் சம்பாஷித்துக்கொண்டே இருந்தனர். செளந்தரவல்லியம்மாள் சுந்தரமூர்த்தி முதலியாரை நினைத்து விரகவேதனையுற்று ஆவல் தீயினால் தகிக்கப்பட்டு எப்போது இரவு வேளை வருமோ என்றும், எப்போது டெலிபோன் யந்திரம் ஒலிக்குமென்றும் சதாகாலமும் ஜெபித்து தியானம் செய்து கொண்டிருந்தாள். தான் சுந்தரமூர்த்தி முதலியாருடன் டெலிபோனில் பேசி முடிக்கிற வரையில் தனது தாயும் கோகிலாம்பாளும் வராமலிருக்க வேண்டுமே என்று தெய்வங்களையெல்லாம் வேண்டிய வண்ணம் தவித்திருந்தாள். நாழிகை ஏறஏற அவளது தேகமும் மனதும் கட்டிலடங்காமல் துடிக்கத் தொடங்கின. அவளது ஆவலும் வேதனையும் மலைபோலப் பெருகி உச்ச நிலையை அடைந்தன. அப்போது மாலைப்பொழுதும் வந்தது. பங்களாவில் வேலைக்காரர்கள் விளக்கேற்றினர். அப்போதும் பூஞ்சோலையம்மாளும் கோகிலாம்பாளும் வந்து சேரவில்லை. புஷ்பாவதியும் செளந்தரவல்லியம்மாளும் ஒரே இடத்தில் நெடுநேரமாய் உட்கார்ந்திருந்தனர். ஆதலால் தாங்கள்