பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோக முஷ்கரம் 93

.**

டெலிபோனண்டையில் ஒரு வேலைக்காரியை வைத்துவிட்டு, அது ஒசைசெய்தால் உடனே ஓடிவந்து தங்களிடம் செய்தி சொல்லும்படி அவளிடம் திட்டம்செய்துவிட்டு, தாங்கள் இருவரும் அவ்விடத்தைவிட்டு வெளியில்போய்ப் பூஞ்சோலைப் பக்கத்தில் சிறிது நேரம் நடந்துவிட்டுத் திரும்பி வரலாமென்ற எண்ணம் தோன்றவே, அதைக் கருதி அவர்களிருவரும் அவ்விடத்தை விட்டுப் புறப்பட ஆரம்பித்தனர். அதே சமயத்தில், டெலிபோனில் மணி கணகனவென்று அடித்துக் கொண்டது. அதைக்கேட்க அவர்களிருவரும் திடீரென்று மிகுந்த களிப்பும், ஊக்கமும், மயிர்ச்சிலிர்ப்பும் அடைந்தனர். முக்கிய மாய் செளந்தரவல்லியம்மாளின் மனம் இன்னதென்று விவரிக்க இயலாத பலமான எழுச்சியையும் துடிதுடிப்பையும், ஆவலையும், கொண்டு அவளைப் பலமாக ஊக்கியது. உடனே புஷ்பாவதி அவளை நோக்கி, “செளந்தரா கூப்பிடுகிறது அநேகமாய் என் தமயனாராய்த்தான் இருக்க வேண்டும். போய்ப் பேசு. நானும் உன் பக்கத்திலேயே நிற்கிறேன். யார் பேசுகிறதென்று அவர் கேட்டால், தயங்காமல் என் பெயரைச் சொல். அவர் கேட்கும் எந்தச் சங்கதியாவது பதில் சொல்ல உன்னால் முடியாவிட்டால், உடனே என் பக்கம் திரும்பி அதைச் சொல்; நான் உனக்கு வேண்டிய தகவலைத் தெரிவிக்கிறேன். அதை வைத்துக்கொண்டு நீ பேசு. நான் பேசுவது போலவே நீ தாராளமாகப் பேசவேண்டும். நாணத்தினால் நீ திக்கித்திக்கிப் பேசினால், அவர் உடனே சந்தேகங்கொண்டு பேசுகிறது நானல்லவென்று கண்டுபிடித்து விடுவார்” என்று கூறி எச்சரித்தாள்.

செளந்தரவல்லியம்மாள் தனக்குப் புருஷராய் வரப்போகும் மணமகனுடன் தான் பேசப்போவதைப்பற்றி அபாரமான சந்தோஷமும் பூரிப்பும் அடைந்து மெய்ம்மறந்து போனவளாய் விரைவாக நடந்து டெலிபோனண்டை போய்ச் சேர்ந்தாள். அதை எடுக்கும்போதே அவளது கைகளும் தேகமும் வெடவெட வென்று ஆடத்தொடங்கின. தான் புஷ்பாவதியல்லவென்றும், செளந்தரவல்லியென்றும் சுந்தரமூர்த்தி முதலியார் கண்டு கொண்டால் அவர் தன்னைப்பற்றி ஏதேனும் தப்பான அபிப்பிராயம் கொள்வாரோ என்ற அச்சம் ஒருபுறத்தில் அவளை