பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்குற்றம் கோடிக் கேடு - பிரயாச்சித்தம்

அதற்கிணங்க, நான் இவளைத் தனிமையில் அனுப்பியதும் முற்றிலும் தப்பான செய்கைகள்தானே. அதை நாம் எப்படி மறுக்க முடியும். அதைப் பற்றி எங்கள் மனிதருக்கு எங்கள்மேல் அருவருப்பும் இழிவான அபிப்பிராயமும் இல்லாமல் போகுமா?” என்றாள். . -

புஷ்பாவதி, “உங்கள் பேரில் உங்கள் ஜனங்கள் எவ்வித கெட்ட அபிப்பிராயமும் கொள்ளாமல், முற்றிலும் நல்ல அபிப்பிராயத்தையே கொண்டு விடுவார்களென்று நான் சொல்லவில்லை. இப்போது எல்லோருடைய மனசிலும் மகா விபரீதமான சம்சயம் ஏற்பட்டுப் போயிருக்கிறது. அதாவது நம்முடைய கோகிலா தானே சம்மதித்து ஏதோ துன்மார்க்கமான கருத்தோடு இன்ஸ்பெக்டருடைய வீட்டிற்குப்போய் வந்திருக்க வேண்டுமென்ற தப்பபிப்பிராயம் இப்போது ஏற்பட்டிருப்பது சகஜமே. அது எவ்வளவு பெரிய தீங்கு! சிறைச்சாலையில் இருப்பவர் கடிதம் எழுதியதும், அதன்படி கோகிலாம்பாள் அவரிடம் போனாள் என்பதும், அவ்வளவு பெரிய குற்றமாகுமா? எப்படியும் கோகிலா அவரையே கட்டிக்கொள்ளப் போகிறாள் என்ற நிச்சயம் ஏற்பட்டிருக்கிறது. கலியாணச் சடங்கு முடிவதற்குள் மாப்பிள்ளையும், பெண்ணும் அன்னியோன்யமாய் ஒருவரோ டொருவர் பழகிவிட்டார்கள் என்ற ஒர் ஏச்சைத் தவிர மற்ற கெடுதல் எதுவும் ஏற்படாது. அந்த விபரீதமான பெரிய அவதூறுக் கும் இந்தச் சிறிய ஏச்சுக்கும் வித்தியாசம் உண்டல்லவா’ என்றாள். அதைக்கேட்ட கோகிலாம்பாள், “நீங்கள் சொல்வது சரியான யோசனைதான். ஆனாலும் அதில் இன்னொரு விஷயம் இருக்கிறது. இன்ஸ்பெக்டரால் எனக்கு ஏற்பட்ட விபத்தைப் பற்றிய வரலாற்றை நாங்கள் இப்போதே வெளியிட்டிருந்தால், அது உண்மையாகப் பட்டிருக்கும். ஓர் இரவு கழித்து நாளைய தினம் போய் அதைச் சொன்னால், நாங்கள் எதோ பொய்யான சமாதானம் சொல்வதாகவும் ஜனங்கள் எண்ணலாம் அல்லவா’ என்றாள்.

புஷ்பாவதி, “எல்லோருமே அப்படி எண்ணி விடுவார்களா? கபடிகளாயிருக்கும் இரண்டொருவர் அந்த மாதிரியான சந்தேகத்தைக் கொள்ளலாம். பெரும்பாலோர் அதை உண்மை