பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 செளந்தர கோகிலம்

இருந்து வதைக்கும் சங்கதிகளைக் கேட்டால், நீங்கள் இப்படிப் பரிகாசமாய்ப் பேசமாட்டீர்கள். அது போகட்டும். நீங்கள் இன்று ராத்திரி ஜாக்கிரதையாகப் படுத்துக் கொண்டிருங்கள். மற்ற சங்கதிகளை நான் பின்னால் சொல்லுகிறேன்’ என்றாளாம். அதைக் கேட்ட நம் அம்மாள் திடுக்கிட்டு பெருத்த திகில் கொண்டு, “ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்? நான் ஏன் ஜாக்கிரதையாகப் படுத்துக் கொள்ள வேண்டும்? இங்கே எனக்கு என்ன அபாயம் நேரப் போகிறது? விஷயத்தை நன்றாகத் திறந்து சொல்லுங்கள்’ என்றார்களாம். உடனே அவள், ‘அம்மா! விஷயம் மகா விபரீதமானது. அது என்னால் வெளியாயிற்று என்றால், அந்த நிமிஷமே என் புருஷருடைய உத்தியோகம் போய்விடும்; என்னையும் கடுமையாகத் தண்டிப்பார்கள். நான் சொல்லும் சங்கதியை நீங்கள் இங்கு உள்ளோரிடம் சொல்லுகிற தில்லையென்று பிரமாணம் செய்து கொடுத்தால் நான் சொல்லுவேன்’ என்றாளாம். உடனே நம் அம்மாள் மிகவும் பயந்து நடுங்கி அப்படியே பிரமாணம் செய்து கொடுத்தார்களாம். உடனே அந்த அம்மாள், ‘கிழவர் உங்களை வரவழைத்தது சாதாரணமாகத் திருவிழாவுக்காகவல்ல. நெடுநாளாக இவர்களுக்கு உங்கள் பேரில் ஆசையாம். அதை அடக்கமாட்டாமல் இப்போது உங்களை வரவழைத்திருக்கிறார். இன்று ராத்திரி நீங்கள் படுத்துக் கொள்ள, இப்போது பிரத்தியேகமான கட்டில் மெத்தை களெல்லாம் போட்டிருக்கிறதைப் பாருங்கள். நீங்கள் அதில் படுத்துத் தூங்கும்போது, நடு இரவில் கதவுகளையெல்லாம் சாத்திவிட்டு அவர் உங்களிடம் வரப் போகிறாராம். வந்து, உங்களுடைய இஷ்டத்தை அவர் மேல் திருப்பிக் கொள்ளப் போகிறாராம். அதற்காகத்தான் நீங்கள் ஜாக்கிரதையாகப் படுத்திருங்கள் என்றேன்’ என்றாளாம். நம் அம்மாள் உடனே திடுக்கிட்டு நடுநடுங்கிக் காதில் கையை வைத்து, “சிவசிவா! நாராயணா என்ன தலைவிதி இது! இப்படியும் உலகத்தில் நடப்பதுண்டா இது எவர் செய்கிற வேலை என் பிராணபதியின் சிரேஷ்டமான குணமென்னர் ஒழுக்கமென்ன! அவர்களைப் பெற்ற வயசு முதிர்ந்த தந்தை அவர்களைக் காட்டிலும் பன்மடங்கு அதிக சிரேஷ்ட குணமுடையவர்களாகவல்லவா இருப்பார்கள்! இவர்கள் எழுதிய கடிதங்களைப் பார்த்தால், இவர்களைத்