பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது 113

தெய்வமென்று மதிக்க வேண்டுமென்ற அபிப்ராயமல்லவா உண்டாகிறது! நீங்கள் சொல்வது எனக்கு நம்பிக்கைப்பட வில்லை’ என்றார்களாம். உடனே அந்த அம்மாள், ‘நான் சொல்வது உண்மையா பொய்யா என்பது இன்றிரவு தெரிந்து போகிறது. இது மாத்திரமா! இதைவிட இன்னம் மகா விபரீதமான காரியங்களையெல்லாம் செய்ய ஏற்பாடாயிருக்கிறது. இன்று ராத்திரி என் சொல் நிச்சயமாகும். பிறகு மற்ற சங்கதிகளை நீங்களே கேட்பீர்கள். இன்னம் கொஞ்ச நேரத்தில் கிழவர் உங்களுக்காக ரோஜாப் புஷ்பம் ஜாதி மல்லிகைப் புஷ்பம் முதலிய படுக்கையறை சாமான்களோடு வரப்போகிறார் பாருங்கள்” என்று சொல்லிய பின் அவ்வளவோடு நிறுத்திவிட்டு ஏதோ அலுவலாய்ப் போய்விட்டாளாம். உடனே நம் அம்மாள் பைத்தியம் பிடித்தவர்களைப் போலாகி விட்டார்களாம். இன்னதென்று விவரிக்க முடியாதபடி அவர்களுடைய மனம் ஒரே குழப்பமும் திகிலுமே மயமாக ஆய்விட்டதாம். அப்படிப் பட்ட படுமோசமான அநீதமும் இந்த உலகில் நடக்குமோவென்று நினைத்து நினைத்து, தாம் என்ன செய்வது என்பதை அறியாமல் திகைத்து நம் அம்மாள் உட்கார்ந்திருந்த சமயத்தில் பெரியவர் ஒரு குடலையில் நல்ல உயர்ந்த ஜாதிப் புஷ்ப வகைகள், இன்னொரு கூடையில் கனிவர்க்கங்கள் முதலியவற்றை வாங்கிக் கொண்டு வீட்டுக்குத் திரும்பி வந்தார்களாம்; வந்தவுடன் ஏராளமான பழங்களை எடுத்துக் குழந்தையிடம் கொடுத்து அம்மாளுக்கும் கொடுத்து தானும் சாப்பிடும்படி சொல்லி நிரம்பவும் பட்சமாக உபசரித்தார்களாம். அம்மாள் அவர்களுடைய நடத்தையை உற்றுக் கவனித்தார்களாம். தவசிப் பிள்ளையின் சம்சாரம் சொன்னது நிஜமென்று நம்புவதற்கும் இடமிருந்ததாம். பிறகு தங்கள் தகப்பனார் ஈசுவரன் கோவிலுக்குப் போய் விட்டார்களாம். தவசிப் பிள்ளைகளின் சம்சாரம் மறுபடி அம்மாளிடம் வந்து, “பார்த்தீர்களா ஐயா இருக்கும் மாதிரியை? ஆனால் இதுவும் உங்களுக்குச் சாதாரணமாக பிரியத்தினாலேயே செய்யத்தக்க காரியமாய்ப் படலாம். இருக்கட்டும். இன்று இரவு 12-மணிக்குள் உங்களுடைய சந்தேகமெல்லாம் நிச்சயமாய் மாறிப் போகிறது பாருங்கள். இப்போது நான் சொன்னது ஒரு பெரிய சங்கதியல்ல; சொல்லாமல் பாக்கி இருக்கும் விஷயத்தைக் செ.கோ.:V-8