பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியாணப் பைத்தியம் 131

உன்னதமான ஆடைகளையும், வைர ஆபரணங்களையும் எடுத்துத் தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டாள். அவளது அழகிய அளகபாரம் நன்றாக வாரி வசீகரமாய்ப் பின்னிவிடப் பட்டிருந்தமையால், அவள் ரோஜாமலர், ஜாதி, மல்லிகை மலர் ஆகிய இரண்டையும் சேர்த்துக் கதம்பமாய்க் கட்டப்பட்டிருந்த அதிமனோக்கியமான பரிமள கந்தத்தை வீசிய புஷ்ப ஸ்ரத்தை எடுத்துத் தனது கட்டின் மேல் சூட்டிக் கொண்டாள். மைசூர் சந்தன சோப்பினால் தனது முகத்தைச் சுத்தம் செய்துகொண்டு நெற்றிக்கு ஜவ்வாதுப் பொட்டிட்டு புருவத்திற்கும் ஜவ்வாதினால் கருமையூட்டிக்கொண்டு கண்களுக்கு மைதீட்டிக் கொண்டு வாசனை திரவியங்கள் கலந்த தாம்பூலம் தரித்து அதரங்கள் இரத்தம்போலச் சிவந்து போகும்படி செய்துகொண்டு நிலைக்கண்ணாடியண்டையில் போய்த் தனது அழகைப் பார்த்தாள். அவளது இயற்கைத் தோற்றமும், செயற்கையணிகளும் ஒன்றுகூடி ஒரே ஜோதி மயமாகவும், இன்பமே நிறைவாகவும் தோன்றின. ஆதலால் அந்த மடந்தை தனக்குத் தானே மோகித்ததன்றி, தனக்கு மணாளனாகப் போகிறவர் தன்னைக் கண்டு அளவற்ற மகிழ்ச்சியும் சந்தோஷமும் அடைந்து தன்மீது மாறாத பிரியமும், நல்ல அபிப்பிராயமும் கொள்வாரென்று நிச்சயித்துக் கொண்டு சிறிதுநேரம் ஒய்யாரமாகத் தனது பஞ்சணை மீது சாய்ந்திருந்தாள். அவ்வாறு தனக்குக் கடிதம் வந்திருக்கிறதென்ற செய்தி புஷ்பாவதிக்குத் தெரிந்திராதென்று அவள் எண்ணினாள். ஆதலால் உடனே அவ்விடத்தைவிட்டு சந்தடி செய்யாமல் நடந்து புஷ்பாவதிக்கு விடப்பட்டிருந்த இடத்திற்குப் போய்ப் பார்த்தாள். அவள் காணப்படவில்லை, அவள் தனது தாயுடன் இருப்பாள் என்றும், எப்படியும் சிறிது நேரத்தில் வருவாள் என்றும் நினைத்து, அந்தக் கடிதத்தைப் புஷ்பாவதியின் சயனத்தின் நடு மத்தியில் வைத்து அதன்மேல் தலையணையொன்றை வைத்து மூடியபின் அவ்விடத்தை விட்டுத் திரும்பித் தனது சயனத்திற்கு வந்து சிறிது நேரம் தனது பஞ்சணையின்மேல் ஒய்யாரமாகச் சாய்ந்திருக்க, மணி பத்துக்கு நெருங்கியது. அவளது மனம் ஆவலே வடிவாய் நிறைந்து துடிதுடித்திருந்தது. அவளது தேகம் ஆசையாகிய தீயினால் தகிக்கப்பட்டு அவ்விடத்தில் இருக்கை கொள்ளாது பறந்து