பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 செளந்தர கோகிலம்

கொண்டிருந்தது. அந்த நிலைமையில், தான் புறப்படவேண்டிய காலம் நெருங்கவே, அவள் சரேலென்று துள்ளி எழுந்து சந்தேகத்திற்கு இன்னொரு முறை தனது வடிவழகை நிலைக்கண்ணாடியில் பார்த்து, எவ்வித ஷராவுக்கும் இட மில்லை என்று திருப்தி செய்துகொண்டு, அவ்விடத்தை விட்டுக் கிளம்பிக் கட்டிடத்தைக் கடந்து வெளிப்பட்டு பூஞ்சோலைக்குள் புகுந்து கமுகுத் தோப்பை அடைந்து அவ்விடத்திலிருந்த கிணற்றண்டை போய்ச் சேர்ந்தாள். அவளது குணவொழுக்கங் களை இதுகாறும் வாசகர்கள் கவனித்து வந்ததில், அவள்மீது அருவருப்பும், ஆத்திரமும் கொண்டிருப்பார்கள். ஆனாலும், ஆழ்ந்து நோக்குங்கால், மற்ற இருவரைக் காட்டிலும் செளந்தர வல்லி குண ஒழுக்கங்களில் மேம்பட்டவளென்றே நாம் கருதவேண்டும். தாயும் மூத்த புதல்வியும் மேலான நற்குண நல்லொழுக்கம் உடையவராயிருந்தாலும், அவர்களிடம் ஒரளவு கபடமும், வியவகார தந்திரமும் இருந்து வந்தனவென்பது பிரத்தியrம். செளந்தரவல்லியிடம் கபடமென்பதே கிடையாது. அந்த மடந்தை உள்ளும் புறமும் ஒத்து சுத்த சுயம்புவாய் நடந்து வந்தாள். தன்னை ஈன்ற தாயாயிருந்தாலும், சரி, தன்னைப் படைத்த சர்வேசுவரனானாலும் சரி, அவர்களிடம் அற்ப குற்றம் காண்பவளாயினும், அவள் அதைக் கண்டு சகிக்கமாட்டாள்; அவர்கள்ை அவள் இலேசில் விடமாட்டாள். அவர்கள் மீது அவளுக்குப் பெருத்த அருவருப்பும் கோபமும் உண்டாவது திண்ணம். அவள் அற்ப குற்றமும் மனசால்கூடச் செய்யாமல் ஒழுங்காக நடக்கிறவள். ஆதலால், மற்றவரிடம் தவறு இருக்கக் கண்டால், அவளுக்கு அவரிடம் பெருத்த rாத்திரம் ஏற்பட்டுப் போவதோடு அவளது மனம் அதைக் குறித்து சங்கடப்பட்டுக் கொண்டே இருக்கும். தாயும், மூத்தவளும் பிறரிடம் குற்றம் இருக்கக் காணினும், யுக்தா யுக்தம், பொருள், இடம், காலம் முதலியவைகளை அவ்வளவாக வெளியில் காட்டாமல் ஒழுகுவர். செளந்தரவல்லி, தனக்குக் கணவனாகப் போகும் மாப்பிள்ளையிடம் கலியாணத்திற்கு முன் தனிமையில் இருந்து, சிறுபிள்ளைத் தனமாக ஏதேனும் விளையாட்டுகள் நடத்துவதை கோகிலாம்பாள் கண்டிருந்தால், அவள் அப்போது பேசாமல் இருந்து, தனிமையில் மிருதுவாகவும் நயமாகவும் அவளுக்கு