பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



4

i

கலியாணப் பைத்தியம்

அந்தக் கலியாணத்தை இன்னம் ஒரு வாரத்திற்குள் வரும் ஒரு முகூர்த்த தினத்தில் முடித்துவிட வேண்டுமென்று எங்களை வற்புறுத்துகிறார்கள். என்னுடைய கலியாணத்தையும் அதையும் ஒன்றாய்ச் சேர்த்துச் செய்துவிட வேண்டுமென்பது என்னுடைய அவா. அதற்குத்தான் நான் இவ்வளவு தூரம் பாடுபடுகிறேன். இவ்விடத்திலோ ஒரு பொத்தலை அடைத்தால் ஒன்பது பொத்தல்கள் திறந்து கொள்ளுகின்றன. இந்தக் கலியாணம் சரிப்பட்டால் பார்க்கிறது. இல்லாவிட்டால் அதை மாத்திரம் முன்னால் முடித்துவிடுவதென்றே நாங்கள் தீர்மானித்திருக் கிறோம். உன்னுடைய அபிப்பிராயம் எப்படி இருக்கிறது?

செளந்தரவல்லி : புஷ்பாவதியம்மாளுடைய புருஷர் வீட்டின் மேம்பாட்டுக்குத்தக்கபடி நாமும் ஆவதற்குப் பதிலாய், எங்கள் வீட்டார் இன்னம் கீழே போய்க் கொண்டேயிருக் கிறார்கள். எனக்கு இப்போது உண்டாகும் ஆத்திரத்தில் என் அக்காளுக்கு விஷத்தைக் கொடுத்துக் கொன்றுவிடலாமா என்று கூட என் மனசு எண்ணுகிறது. நாமும் நாலு பேருக்குச் சமதையாய் இருப்பதைவிட்டு அவள் எவனோ ஒர் அன்னக் காவடியைக் கட்டிக்கொள்ள நினைத்து அதற்காக என்னென்ன இழிவான காரியங்களையெல்லாம் செய்கிறாள். சே! அவளுடைய முகத்தில் விழிக்கக்கூட இனி என் மனம் ஒருப்படாது.

சுந்தரமூர்த்தி முதலியார் : சேச்சே! அந்தக் காரியத்தை மாத்திரம் செய்யாதே. அக்காளைக் கொன்றுவிட்டால், இன்னம் ஒரு வாரத்திற்குள் நாம் செய்ய உத்தேசித்திருக்கும் கலியாணம் தடைப்பட்டுவிடும். உனக்கும் உன் தாயாருக்கும் தீட்டு வந்துவிடும். அதுவுமன்றி, எங்களுடன் இவ்வளவு தூரம் சிநேக மாயிருக்கும் இந்தக் குடும்பத்தார் இப்படி அசெளகரியமான நிலைமையில் இருக்கையில் நாங்கள் சந்தோஷமாய்க் கலியாணத்தை நடத்துவதும் சரியல்ல.

செளந்தரவல்லி : மெய்தான்; இனி நான் எந்த விஷயத் திலும் அவ்விடத்து புத்திமதிப் படியும் யோசனைப் படியும் நடக்கத் தடையில்லை. என் அக்காளுடைய கலியாணம் வரையில் நான் காத்திருப்பது உசிதமல்லவென்று நினைக்கிறேன். காத்திருந்தால், நிலைமை ஒருகால் இன்னம் அதிக கேவலத்திற்கு