பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i40 செளந்தர கோகிலம்

அந்த வரலாற்றைக் கேட்ட செளந்தரவல்லியின் மனத்தில் ஒரு புறத்தில் அபாரமான சந்தோஷம் தோன்றியது; இன்னொரு புறத்தில் ஒருவிதமான பொறாமை தோன்றியது. தனக்கு வாய்த்திருக்கும் புருஷரைவிடப் புஷ்பாவதிக்கு ஏற்பட்டிருக்கும் புருஷர் மகா சிலாக்கியமானவர் என்ற எண்ணம் அவளது. மனத்தில் எழுந்தது. சுந்தரமூர்த்தி முதலியாரைவிட அவர் தனக்கு அகப்பட்டிருந்தால், தன் மனம் இன்னமும் அதிகமாக சந்தோஷப்படும் என்று அவள் நினைத்தாள். அவளது முகம் உடனே மாறுபட்டது. மனதின் உற்சாகமும் சடக்கென்று குறைந்துபோய்விட்டது. ஆயினும் அவள் தனது மனநிலையை வெளிப்படுத்தாமல் தன்னை ஒருவாறு அடக்கிக்கொண்டு முன்போலவே அவரிடம் சம்பாஷிக்கத் தொடங்கி, ‘ஆ! அப்படியா நிரம்பவும் சந்தோஷமாயிற்று. புஷ்பாவதியம்மா ளுடைய மேலான மனப்போக்கிற்கும், குணத்தழகுக்கும், அது சரியான இடந்தான். அந்தக் குடும்பத்துக்கு மாப்பிள்ளை ஒருவரைத் தவிர வேறு யாரும் வார்சுதாரர் இல்லையாகையால், அவ்வளவு பிரமாதமாக இருக்கும் சம்பத்து முழுதும் புஷ்பாவதி யம்மாளுக்குத்தான் வந்து சேரும். பேஷ்! அவர்கள் நல்ல ராஜபோகத்தில் இருப்பார்கள்” என்றாள்.

சுந்தரமூர்த்தி முதலியார் : ஆம்; அந்த இடம் எப்பேர்ப் பட்டவருக்கும் வாய்க்கக் கூடியதல்ல. எங்களுக்குக்கூட அது இவ்வளவு சுலபத்தில் கிடைத்திருக்காது. எங்களுடைய பங்களாவும் மைலாப்பூரில் இருக்கிறது. அவர்களுடைய பங்களாவும் அங்கே இருக்கிறது. அவர்களுடைய பெருமைப்பாடு எங்களுக்கும் வெகு காலமாய்த் தெரியும். எங்களுக்கும் அவர் களுக்கும் சாதாரணமான பழக்கம் உண்டு. மாப்பிள்ளைக்கும் எனக்கும் சிநேகமென்றே சொல்ல வேண்டும். என் தங்கையின் புகைப்படமொன்றை நான் ஒரு நாள் என் சட்டைப் பையில் வைத்திருந்தேன். அதை அவர் எடுத்துப் பார்த்து அது யாருடைய படமென்று கேட்டார். அது கலியாணமாகாத என் தங்கையின் படமென்று நான் சொன்னேன். அது முதல் அவருக்கு என் தங்கையின் மேல் ஆசை உண்டாகிவிட்டது. கட்டினால், என் தங்கையையே கட்டுவது இல்லாவிட்டால், தமக்குக் கலியாணமே வேண்டாமென்று அவர் ஒரே பிடிவாதம் பிடிக்கிறார். அவர்கள்