பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 - செளந்தர கோகிலம்

அது வரையில் பூச்செடிகளின் மறைவில் ஒளிந்திருந்து அவ்விடத்தில் நிகழ்ந்த சம்பாஷணை முழுதையும் தொடக்கத் திலிருந்து கேட்டுக் கொண்டே இருந்த நமது கோகிலாம்பாளின் மன நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதை மனதால் பாவித்துக் கொள்வதே சுலபமானது. அவர்கள் இருவரும் வெகு தூரம் போய் மறைந்து போகிற வரையில், கோகிலாம்பாள் தான் என்ன செய்வதென்பதை அறியாதவளாய் அப்படியே பிர்மித்து நின்றுவிட்டாள். தான் செய்த அற்ப தவறு பெரிய மலைபோல் வளர்ந்து, தனது தங்கை தன்னை முற்றிலும் வெறுக்கவும், அன்னிய மனிதரிடம் தன்னையும் தனது தாயையும் துாற்றவும், விஷமிட்டுத் தன்னைக் கொன்றுவிட வேண்டுமென்ற மனப்பான்மையைக் கொள்ளவும், தன்னை விலக்கிவிட்டு அவளது கலியாணத்தை முடித்துக் கொள்ளவும், தங்களது சொத்து முழுதையும் தனது கைவசப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று எண்ணவும் இடங்கொடுத்துவிட்டதே என்று கோகிலாம்பாள் நினைத்து நினைத்து விவரிக்க இயலாத பெருத்த திகைப்பும் பிரமிப்பும் அடைந்து, ‘சே’ என் மதிப்பு இவ்வளவு கேவல நிலைமைக்கு வந்த பிற்பாடு, நான் இந்த உயிரைச் சுமந்துகூட வாழ வேண்டுமா! என்னால் ஏற்பட்ட அவமானங்கள் தன்னுடைய கண்ணியத்தைப் பாதிப்பதாக செளந்தரவல்லி நினைப்பது நியாயமான விஷயமே. என்னுடைய நிலைமைதான் இப்படி அலங்கோலத்துக்கு வந்துவிட்டது. அவளாவது நல்ல நிலைமையில் இருந்து நல்ல இடத்தில் வாழ்க்கைப்பட்டு rேமமாகவும் கண்ணியமாகவும் இருக்கட்டும். நான் எப்போது தற்கொலை செய்துகொள்ளத் தீர்மானித்துக் கொண்டேனோ, அப்போதே என் பாகம் உள்பட எல்லாச் சொத்தும் அவளைச் சேர்ந்த மாதிரிதான். நான் அந்தக் கிணற்றில் விழுந்தபோதே இறந்திருந்தால், இந்நேரம் எல்லாவற்றிற்கும் அவளே எஜமானி ஆகியிருப்பாள். ஆகையால் சொத்தைப்பற்றி எனக்குக் கொஞ்சமும் கவலையில்லை. எல்லாவற்றையும் அவளே எடுத்துக் கொள்ளட்டும். அவளை ஒன்றையுமறியாத குழந்தை என்று நாம் இதுவரையில் நினைத்தது தவறு. அவள் நிரம்பவும் சூrமமான புத்தியும் சிறந்த பகுத்தறிவும் உடையவளாய் இருக்கிறாள் என்பது இப்போதுதான் தெரிகிறது. இத்தனை