பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 செளந்தர கோகிலம்

திலும், என் புருஷர், மாமியார் முதலியோர் விஷயத்திலும் ஏற்பட்டுள்ள ஊழ்வினைத் துன்பங்கள் மகா விபரீதமானவை களாய் இருக்கின்றன. ஆதலால், இவைகளுக்கெல்லாம் கிரகமே மருந்து, இத்தனை இடர்களையும் நாம் , நின்றாவது உயிர்வாழ ஆசைப்படுவதைவிட அவற்றை ஏற்றுக் கொண்டு உயிரைவிட்டு விடுவதே சத்தியாக்கிரகம். உயிரோடு கூடவே எல்லா அல்லல்களும் தொலைந்துபோம்” என்று கோகிலாம்பாள் தனக்குள்ளாகவே எண்ணமிட்டுக் கிணற்றில் விழுந்து தனது உயிரை மாய்த்துக் கொள்ள GGG06 தீர்மானத்திற்கு வந்தவளாய், அதற்குப் பூர்வ .b காகிதம், எழுதுகோல் முதலியவற்றை எடுத்துத் தனது தாய்க்கு ஒரு கடிதம் எழுதத் துவங்கினாள். அவ்வாறு எழுதும்பொழுது சகிக்க வொண்ணாத மனவெழுச்சியும் வாஞ்சை முதலிய உணர்ச்சிகளும் பொங்கி யெழுந்து அந்த மடந்தை எழுதிய கையை நடுக்கு வித்தன. அடிக்கடி கண்ணிர்த் துளிகள் அவள் எழுதிய கடிதத்தின் மேல் விழுந்தன. தான் இறந்து போனதைக் கண்டு தனது நற்குணத்தாய் சிறிதும் பொறாமல் அலறிப் புலம்பி அழுது தனது உயிரையும் விட்டு விடுவாளே என்ற எண்ணம் தோன்றி அந்தப் பெண்மணியின் மனத்தை முற்றிலும் வதைத்து வாட்டியது. ஆனாலும், அந்த மாது சிரோன்மணி தனது மனவுறுதியில் தளர் வறாமல் கடிதத்தை எழுதி முடித்து அதை உறைக்குள் போட்டு ஒட்டித் தனது மேஜைக்குள் வைத்தபின் சரேலென்று எழுந்து அவ்விடத்தைவிட்டு வெளிப்பட்டாள்.

அப்பொழுது இரவு பத்துமணி சமயமாய் இருக்கலாம். எங்கும் இருளும் நிசப்தமுமே குடிகொண்டிருந்தன. பகல் முழுதும் கோகிலாம்பாளும் அவளைத் தேடிச்சென்ற பூஞ்சோலை யம்மாளும் திரும்பி வராமையால் ஏற்பட்ட கவலையினாலும், சஞ்சலத்தினாலும், அதன் பிறகு சொந்த ஜனங்களை அழைத்து வரப் பல தெருக்களுக்கும் ஒடிப்போய்த் திரும்பி வந்த அலுப்பினாலும், பின்னர் சொந்த ஜனங்களுக்குக்கெதிரில் வெளியான விபரீதச் செய்திகளைக் கேட்டதனால் ஏற்பட்ட கலவரத்தினாலும், தங்கள் எஜமானிமார்களுக்கு அன்றைய தினம் உண்டான மான பங்கத்தை உணர்ந்ததனால் ஏற்பட்ட அவமானத்தினாலும் வேலைக்காரர்கள் எல்லோரும் மிகுந்த