பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.58 செளந்தர கோகிலம்

சொல்லி அந்த விவரம் முழுதையும் உடனே வந்து உனக்குத் தெரிவிக்கும்படியாகவும் கேட்டுக் கொண்டார்கள் என்று கூறி, கடிதத்தில் எழுதப்பட்டிருந்த சங்கதிகள் அனைத்தையும் அப்படியே ஒரெழுத்து விடாமல் தெரிவித்தாள்.

அதைக்கேட்ட செளந்தரவல்லி அபாரமான குதுரகலமும் பூரிப்பும் ஆனந்தப் பெருக்குமடைந்து, அப்பொழுதே சகலமான அதிகாரங்களையும் தலைமையையும் வகித்துவிட்டவள்போல ஆய்விட்டாள். அவள் உடனே புஷ்பாவதியை நோக்கி, ‘கோகிலா நல்ல புத்திசாலி. ஆகையால் முன்னெச்சரிக்கை அடைந்து தப்பினாள். இப்படிச் செய்யாவிட்டால், தான் என்னிடம் அகப்பட்டு மேன்மேலும் மானபங்கப்பட வேண்டியிருக்கும் என்பதை அவள் தெரிந்து கொண்டு ஒடியே போய்விட்டாள். போகட்டும். நல்ல காரியம் செய்தாள். என் வேலையை அவள் சுலபமாக்கினதைப் பற்றித்தான் நான் இப்போது முக்கியமாய் சந்தோஷப்படுகிறேன்’ என்றாள்.

உடனே புஷ்பாவதி, ‘ஆமம்மா மெய்தான்’ என்றாள்.

செளந்தரவல்லி, சரி; எனக்கு ஏற்படுத்தப்பட்ட நிபந்தனை களெல்லாம் நிறைவேறிப் போயின. இனி உங்களால் ஆகவேண்டிய காரியந்தான் பாக்கி, அதை நீ தான் துரிதப்படுத்தி முடிக்க வேண்டும். இப்போது உன் தமயனார் வருவார்களல்லவா. அவர்களிடம் நீயே எல்லா விஷயங்களையும் விவரமாகச் சொல்லி, உன் கலியாணத்தோடு என் கவியாணத்தையும் முடிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் செய்யும்படி முயற்சியெடுத்துக் கொள். எனக்கு அவ்வளவாக அதுபோகம் இல்லை. எதைச் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் நீயும் உன் தமயனாருமே கலந்து யோசித்துச் செய்யுங்கள். உங்கள் வீடு வேறு, இது வேறு என்ற வித்தியாசத்தை இனி நீங்கள் பாராட்டக் கூடாது. செலவுக்கு எவ்வளவு பணத்தொகை தேவையானாலும், அதை நான் உடனே கொடுக்கிறேன். இதற்கு முன் என் அக்காளுடைய நிச்சயதார்த்த கவியானத்திற்கு என்னென்ன ஏற்பாடுகளும், அலங்காரங்களும் நடந்தனவோ அவைகளுக்கு மேல் நூறு மடங்கு அதிக சிறப்பாகவும் விமரிசையாகவும் எல்லாம் நடக்க வேண்டும். எப்படியாவது முயற்சி செய்து எங்களுடைய