பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 செளந்தர கோகிலம்

சீமைக்குப் போய் ஐ.சி.எஸ். பரீட்சையில் தேறி, அஸிஸ்டெண்டு கலெக்டராய் வந்திருக்கிறான். வெகு சீக்கிரம் பெரிய கலெக்டர் உத்தியோகம் ஆய்விடும். மாசம் ஒன்றுக்கு மூவாயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும். அபாரமான செல்வாக்கு, அதுவன்றி, இப்போது அவர்களுக்கு இருக்கும் கம்பெனியும், வீடுகளுமே, ஒரு மகாராஜனுடைய செல்வத்துக்கு அதிகமாயிருக்குமென்று மதிக்கலாம். அந்த ஒரு பையனைத்தவிர வேறே ஆணுமில்லை பெண்ணுமில்லை. அவ்வளவும் உனக்குத்தான் வந்து சேரப் போகிறது. இவர்களுடைய சொத்து முழுவதையும் சேர்த்துப் பார்த்தால் அவர்களுடைய சொத்தில் நூறில் ஒரு பங்குகூடக் காணாது. எனக்குக் கிடைக்கப்போகும் இடம் இதற்குமுன் பிரமாதமாகத் தோன்றியது. இப்போது, இது கேவலம் அற்பமாகத் தோன்றுகிறது. நமக்கு அப்பேர்ப்பட்ட இடம் கிடைக்கவில்லையே என்று நான் கூடப் பொறாமைப்படும்படி இருக்கிறது. அப்படியானால் அந்த இடம் எப்பேர்ப்பட்டதாக இருக்க வேண்டுமென்று நீயே யோசித்துக்கொள். பையனுடைய தாயும் தகப்பனும் இதற்குமுன் உன்னை ஒருதரம் பார்த்திருக் கிறார்கள் அல்லவா. அந்த ஞாபகத்தை வைத்துக்கொண்டு, உன்னுடைய வயசு எவ்வளவு என்று அவர்கள் என்னைக் கேட்டார்கள். உனக்கு இன்னம் பதினெட்டு வயசுகூட நிறைய வில்லையென்றும், அதிகமாய்ப் படித்தபடியால் கொஞ்சம் வயசு அதிகம்போலத் தெரிகிறதென்றும் நான் சொல்லி வைத்தேன். அவர்களுக்கு அரை மனசுதான். அவர்கள்ைத் திருப்திசெய்ய முயற்சிப்பதைவிட பையனை வேறு வழியில் பிடித்து மடக்கி விட வேண்டுமென்பது என்னுடைய எண்ணம். நான் என்ன செய்தேன் தெரியுமா? முன்னொருதரம் நான் இங்கே வந்து விட்டுப் போனேனல்லவா. அப்போது, ஹாலில் மாட்டப்பட் டிருந்த படங்களையெல்லாம் நான் வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டே இருந்தேன். ஏராளமான புஷ்பங்கள் மலர்ந்திருந்த ஒரு ரோஜாச்செடியில் புஷ்பம் பறிப்பதுபோல, ஒரு பெண் நின்று கொண்டிருந்ததாக ஒரு படம் எடுக்கப்பட்டிருந்தது. கிட்டப் போய்ப் பார்த்தேன். கோகிலாம்பாளோ செளந்தரவல்லியோ இருவரில் ஒருத்தி அப்படி நின்று படம் எடுத்துக் கொண்டிருந் தாள். அந்த அலங்காரமும், அழகும் அப்படியே கண்ணைப்