பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்குற்றம் கோடிக் கேடு - பிரயாச்சித்தம் 15

கலக்கமும் விசனமும் தளர்ச்சியும் அடைந்து சோர்ந்து போய்த் தங்களது இராப் போஜனத்தைக்கூட நினையாமல் மறைவான இடங்களில் படுத்து அயர்ந்து துரங்கிக் கொண்டிருந்தனர். சில இடங்கள் இருளடைந்திருந்தன. அந்த நிலைமையில் நமது கோகிலாம்பாள் தனது விடுதியை விட்டு வெளிப்பட்டு, சந்தடி செய்யாமல் மெல்ல மெல்ல நடந்து பல கூடங்களையும் தாழ்வாரங்களையும் கடந்து சென்று பூஞ்சோலைக்குள் நுழையலானாள். தான் செல்வதை எவரேனும் காண்கிறார்களோ வென்ற அச்சத்தினால், அந்த மடக்கொடி தயங்கித் தயங்கி நின்று திரும்பித் திரும்பி நாற்புறங்களையும் பார்த்த வண்ணம் சித்தப் பிரமை கொண்டவள் போன்ற தோற்றத்தோடு எதிரி லிருந்த தென்னஞ் சோலைக்குள் புகுந்து அப்பால் சென்றாள். அவளது தேகம் வெளிப் பார்வைக்கு அயர்ந்து செயலற்று காற்றில் பறக்கும் சருகு போலச் சீவனற்றுத் தோன்றியதாயினும், அவளது மனத்தில் அகோரமான வலிய மல்ல யுத்தம் நடந்து கொண்டிருந்தது. தோட்டத்தில் சிறிது தூரம் நடந்த சமயத்தில் அவளது கண்கள் தாமாகவே பின் பக்கம் திரும்பித் திரும்பி ஆசையோடு தங்கள் கட்டிடத்தைப் பார்த்தன. அவள் “ஐயோ! நான் பிறந்து வளர்ந்து ஓடி விளையாடி இந்தப் பதினாறு வருஷ காலம் இருந்து வந்த ரமணியமான இந்தப் பங்களாவை நான் பார்ப்பது இதுவே கடைசி முறையல்லவா இனி மறுபடி நான் இந்த வைபவங்களையெல்லாம் காணப்போகிறேனோ’ என்று, தனக்குத் தானே எண்ணமிட்டுக் கண்ணிர் விடுத்து நைந்திளகி உருகிய வண்ணம் மேலும் நடந்தாள். நடக்கவே, அவளது தாயான பூஞ்சோலையம்மாள் தனது சுந்தரமான இனிய வதனத்தோடு எதிரே வந்து நின்று, ‘கோகிலா கண்ணுர! நான் உன்னை விட்டுப் பிரிந்து ஒரு நிமிஷமும் உயிர் வாழ்ந்திருக்கச் சகியேன். அம்மா! நீ இந்தக் காரியத்தைச் செய்யாதே! நீயும், நானும் இறந்துபோய் விட்டால், ஒன்றையும் அறியாத பேதையான நம்முடைய செளந்தரவல்லி அநாதரவாக இருந்து தவிக்க நேரும். அந்தப் பாவம் நம்மைத்தான் சேரும். வேண்டாம் என்தங்கமே! வீட்டுக்கு வந்து விடு” என்று கூறித் தனது மோவாயைப் பிடித்துக் கொண்டு நயந்து நிரம்பவும் வேண்டிக் கொண்டதுபோல, மானசீகமான ஒரு தோற்றம் அந்த மடவன்னத்திற்கு ஏற்பட்டது. உண்மை