பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 செளந்தர கோகிலம்

அத்தையைப் போல இருக்கிறதம்மா ஐயோ! பாவம் கெடிலம் ஆற்றிலா விழுந்து விட்டார்கள் ஒரு சேலைதானே இவர்களிடம் இருக்கிறது. எனக்கு தினம் தினம் அப்பா பட்சணத்துக்காகக் கொடுத்ததையெல்லாம் நான் உண்டியில் போட்டு வைத்திருக் கிறேனல்லவா. அது இப்போது பதினெட்டு ரூபாய்க்கு மேல் ஆகியிருக்கிறது. அதைப்போட்டு அந்த அம்மாளுக்கு இன்னொரு சேலை வாங்கிக் கொடுங்கள்” என்று சொல்லி உடனே உண்டியை எடுத்துக் கொடுத்ததன்றி, “இந்த அம்மாள் பெயரைச் சொல்ல மாட்டேனென்கிறார்களே. இவர்களைப் பார்த்தால், நல்ல மாதிரியாக இருக்கிறார்கள். நாம் அந்த அம்மாளை குணவதி அம்மாள் என்ற கூப்பிடுவோம்’ என்றதாம். அதைக்கேட்ட ஊர் ஜனங்கள், “ஆகா விதையொன்று போட, சுரையொன்று முளைக்குமா” என்று கூறி அந்தக் குழந்தையின் சிக்கனத்தையும் பெருந்தன்மையையும் புத்திசாலித்தனத்தையும்பற்றி வாய் ஒயாமல் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். - என்று எழுதப்பட்டிருந்த சமாசாரத்தைப் படித்த புஷ்பாவதி, “ஆம்; இதற்கும் இந்த வீட்டாருக்கும் என்ன சம்பந்தம்?” என்றாள். -

சுந்தரமூர்த்தி முதலியார், ‘இவ்வளவுதானா உன் புத்தி சாலித்தனம்! அவள் யாரென்பது தெரியவில்லையா? அவள் தான் நம்முடைய கற்பகவல்லியம்மாள். ராத்திரி புறப்பட்டுப் போனவள் இந்த ஊரில் தற்கொலை செய்து கொண்டால் இன்னார் என்பது தெரிந்து போகுமென்று நினைத்து, ராத்திரி முழுதும் எங்கேயோ இருந்து விடியற்கால வண்டியில் போயிருக் கிறாள் மறுநாள் காலை பத்து மணி வரையில் கூடவே சகப் பிரயாணிகள் இருந்திருப்பார்கள், வண்டியில் யாரும் இல்லாத சமயம் பார்த்து ஆற்றில் விழுந்திருக்கிறாள்’ என்றார்.