பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18-ஆவது அதிகாரம் வெடி குண்டுகள்

றுநாள் அதிகாலையில் சாமியார் இருவரும் திருச்செந்தூரை விட்டுப் பிரயாணமாய்த் திரும்புங்காலிலும் மதுரையை அடைந்தனர். உதவிச் சாமியார் திவான் சாமியாரை நோக்கி, 3 ‘சுவாமிகளே! பைத்தியக்காரன் கிழித்தது கோவணத்துக்கு உதவியது என்பார்கள். அதுபோல யாரோ ஒரு பைத்தியக்காரன் நம்மைப் புரளி செய்வதற்காக ஏதோ தாறுமாறாக உளறி வைத்ததைக் கேட்டு நாம் திருச்செந்தூர் போனதில் எத்தனை பெருத்த நன்மைகள் ஏற்பட்டன பார்த்தீர்களா’ என்றார்.

திவான் சாமியார், ‘ஆம். சுவாமிகளே! ஈசனுடைய திருவிளையாட்டுகளே வெளித் தோற்றத்திற்கு அர்த்தமில்லாத பைத்தியக்கார சங்கதிகளாய்த் தோன்றும். ஒவ்வோர் அணுவிலும் ஒரு பெருத்த மலையங்வளவு விஷயம் அடங்கியிருக்கும். நாம் இறப்பு பிறப்பாகிய பெருத்த காட்டாற்று வெள்ளத்தில் கிடந்து உருட்டப்படும் கட்டைகளேயன்றி வேறல்ல. இப்போது திருச்செந்தூரில் நடந்த சம்பவ சம்பந்தமாய் நான் உங்களிடம் ஒரு விஷயம் கேட்டுக் கொள்ள எண்ணுகிறேன். நீங்கள் கண்டியூர்ச் சம்பவத்தைப் பெரியவரிடம் வெளியிடாமலிருக்கும் சம்பந்தமாய் எனக்கு ஏற்கெனவே உதவி செய்ததுபோல, இப்போது இந்த விஷயத்திலும் உதவி செய்ய வேண்டும். வீரம்மாளுக்கும் எனக்கும் நடந்த சம்பாஷணையிலிருந்து பெரியவர் என் தகப்பனார் என்பது உங்களுக்கு அவசியம் தெரிந்து போயிருக்கும். நான் இறந்து போய்விட்டதாகவே என் தந்தையாரும் மற்ற உலக ஜனங்களும் நினைத்துக் கொண்டிருக் கிறார்கள். என் சம்சாரத்தைப் பற்றி ஏற்பட்ட ஒரு பெரிய