பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i.74 செளந்தர கோகிலம்

சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளும் பொருட்டே நான் இறந்து போனதாக நடிக்க நேர்ந்தது. நான் அவர்களுடைய குமாரன் என்பதை தக்க சமயம் பார்த்து வெளியிட வேண்டும். அதுவரையில், நான் அவர்கள் குமாரருடைய சிநேகிதனென்று சொல்லி வைத்திருக்கிறேன். பெரியவர் உங்களிடத்தில் என்னைப் பற்றி அதே தகவல்தான் கொடுத்திருப்பார் என்று நினைக்கிறேன். ஆகையால், நான் அவர்களுடைய குமாரன் என்ற விஷயத்தை நீங்கள் தெரிந்து கொண்டதாகவே காட்டிக் கொள்ளாமல், முன் போலவே இருக்க வேண்டும். அதுவுமன்றி, என் சம்சாரம், குழந்தை முதலியோரைப் பற்றி நமக்குக் கிடைத்த செய்தி அவர்களுக்கு எட்டுமானால், அவர்கள் மறுபடி வியாதியில் விழுந்துவிடுவார்கள். ஆகையால், அதையும் இப்போது தெரிவிக்க வேண்டாம். இன்னொரு விஷயமும் இருக்கிறது. என் தகப்பனாரின் மேல் அந்த இராமலிங்கத்தின் சம்சாரம் சொன்ன அவதூறுச் சொல் எவ்வளவு தூரம் உண்மையானது என்பதை அவர்களிடம் கேட்டது மரியாதையல்ல. வேறு யார் மூலமாயாவது அதன் உண்மையைத் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அதுவுமன்றி, என் சிறிய தாய் அந்தச் சதியாலோசனையில் எவ்வளவு தூரம் சம்பந்தப்பட்டிருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்டு, அவள் குற்றமற்றவளாயிருந்தால் மாத்திரம் நாம் அவளைக் கண்டுபிடிக்கவும் பெரியவரிடம் சேர்த்து வைக்கவும் வேண்டும்” என்றார்.

உதவிச் சாமியார் : சுவாமிகளே! அடியேன் தங்களுடைய சித்தம் எப்படியோ அப்படியே நடக்கக் காத்திருக்கிறேன். தாங்கள் இப்போது சொன்ன யோசனைகள் எனக்கும் சம்மத மானவைகளே. நாம் இப்போது நேராய்த் திருவையாற்றுக்குப் போகவேண்டாம். திருவடமருதூருக்குப் பக்கத்திலுள்ள சில ஊர்களில், அந்த இராமலிங்கத்தின் சொந்தக்காரர்கள் இருக் கிறார்கள் என்று நான் ஏற்கெனவேயே சொன்னேன் அல்லவா. அந்த ஊர்களுள் முக்கியமான இரண்டோர் இடங்களுக்கு நாம் போய்த் தந்திரம்ாக விசாரித்து கிடைக்கக்கூடிய தகவல்களைத் தெரிந்துகொண்டு பிறகு திருவையாற்றுக்குப் போகலாம். தங்கள் தகப்பனார் தத்ரூபம் சிவபெருமானைப் போல இருக்கிறார்கள். அவர்கள் பேரில் ஏற்பட்டது அபாண்டமான புளுகாய்த்தான்