பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெடி குண்டுகள் 175

இருக்க வேண்டும். யோக்கியமான மனிதர்களுடைய வயிறெரியச் செய்தவர்கள் நன்றாயிருப்பார்களென்று நினைக்க வேண்டாம். அவர்கள் அழிந்து அதோகதியாய்ப் போயிருப்பார்கள் என்பது நிச்சயம். அதையும் நாம் விசாரித்துப் பார்த்து விடுவோம்’ என்றார். -

திவான் சாமியார் உதவிச் சாமியாருடைய விருப்பத்தின் படியே தாம் மேற்படி ஊர்களுக்கு வருவதாக ஒப்புக்கொள்ள, இருவரும் மதுரையை விட்டுப் புறப்பட்டு ரயில் மார்க்கமாகப் பிராயாணம் செய்து திருவடமருதூருக்கு அருகிலுள்ள குத்தாலம் என்ற ஊரில் வந்து இறங்கினார்கள். இறங்கியவர்கள் அவ்விடத்தி லிருந்து ரஸ்தா மார்க்கமாக நடந்து rேத்திரபாலபுரம் என்ற சிறிய கிராமத்தை அடைந்து, வேளாளர் தெருவிற்குள் சென்றனர். அந்த வேளாளர் தெருவில் சுமார் இருபது கூரை வீடுகள் இருந்தன. அவ்வீடுகளில் வசித்தோர் அனைவரும் கூலிக்குப் பண்ணை வேலை செய்யும் எளிய மனிதர்களென்பது எளிதில் தெரிந்தது. தெருவின் கிழக்குக் கோடியில் பாதி இடிந்து பாழடைந்தும் பாதி வரை போர்த்தப்பட்டும் இருந்த ஒரு வீட்டு வாசலை அடைந்த உதவிச் சாமியார் ஒரு சாண் உயரம் ஒரு முழ அகலம் ஆறடி நீளத்தில் மண்ணினால் போடப்பட்டிருந்த அந்த வீட்டின் திண்ணையில் திவான் சாமியாரை உட்காரச் செய்து தாமும் உட்கார்ந்து கொண்டார்; அவ்விடத்திற்கு வருமுன்னரே, அவர் கடைத் தெருவில், ஒரு ரூபாய் செலவு செய்து பழவகைகள், மிட்டாயி தினுசுகள், வெற்றிலைப் பாக்கு முதலிய சாமான்களை வாங்கி மடியில் வைத்துக் கொண்டிருந் தார். இருவரும் எந்த வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டார்களோ அதன் உட்புறத்தில் அப்போது இரண்டு ஸ்திரீகளுக்குள் ஏதோ சச்சரவு நடந்து கொண்டிருந்தது. ஒருத்தி மற்றவளை நோக்கி, ‘அடி போடி குருட்டு நாயே! இரண்டு கண்களும் அவிந்து, கட்டத் துணியில்லாமல், தின்னச் சோறில் லாமல் நாறிக் கிடக்கிற உனக்கு இவ்வளவு ராங்கியாடி! உன்னுடைய நல்ல ஆம்படையான் இங்கே சம்பாதித்துக் கொட்டி வைத்திருக்கிறானாடி! எழுந்து வெளியிலே போடி’ என்று பலமாக அதட்டிக் கூறினாள்.