பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 செளந்தர கோகிலம்

பார்த்தார். ஒன்றும் புலப்படவில்லை. அவர்கள் எங்கேயாவது இருக்கும் மடம் முதலிய தர்மங்களுக்குப் பணவுதவி கேட்க வந்திருப்பார்களென்றே அவர் நினைத்து, “அடாடா! நான் நல்ல தசையிலிருக்கும்போது இவர்கள் வராமல், தரித்திர நிலைமையி லிருக்கும்போதா வரவேண்டும். இதுவும் கடவுளின் சோதனை தான் என்று எண்ணியவராய் அவர்களை உள்ளே வரவழைத்து உட்காரச்செய்து, அவர்களை நோக்கி, “என்னைக் கடவுள் பலவகையில் சோதனை செய்து முடிவில் என் உயிரையும் கொண்டு போக முயற்சிக்கும் நிலைமையில் சுவாமிகள் இந்த ஏழையை நாடி வந்திருக்கிறீர்கள். தங்கள் வருகை வீண் பிரயா சையாகவே முடியுமன்றி, அதிகமான பலனைத் தரப்போகிறதில் லையே என்ற எண்ணம் இப்போதே என்னை உபத்திரவிக்கிறது” என்று கூறினார்.

உதவிச் சாமியார் அவரைப் பார்த்து சந்தோஷமாகப் புன்னகை செய்து, ‘கனவானே! நாங்கள் தங்களிடம் ஏதோ தர்ம விஷயமாக வந்திருக்கிறதாக எண்ணுகிறீர்கள் என்பது பிரத்தியr மாகத் தெரிகிறது. அப்பேர்ப்பட்ட பொருளுதவி யாதொன்றையும் நாடி நாங்கள் இங்கே வரவில்லை. தங்களைப்பற்றி மற்றவரிடம் விசாரித்துக் கொண்டே நாங்கள் இங்கே வந்திருக்கிறோம். தங்களை கடவுள் பல வகையில் சோதனைக்கு ஆளாக்கி இருக்கிறார் என்பதையும் நாங்கள் கேள்வியுற்றோம். நாங்கள் கோரி வந்தது தங்களுடைய வாய் வார்த்தையாகிய உதவியே யன்றி வேறொன்றுமில்லை. எங்களுக்கு ஒரு முக்கியமான தகவல் தெரிய வேண்டியிருக்கிறது. அதைத் தங்கள் மூலமாய்த் தெரிந்து கொள்ள வேண்டுமென்று வந்தோம்’ என்று நிரம்பவும் விநயமாகக் கூறினார்.

துரைக்கண்ணு முதலியாரின் மன சஞ்சலம் ஒருவாறு குறைந்தது. அவர் துணிபும் தெளிவும் அடைந்து, ‘தங்களுக்கு என்ன தகவல் தெரிய வேண்டும்?’ என்றார்.

உதவிச் சாமியார், ‘தங்களுடைய குடும்பம் எந்தப் பாவியால் இந்த நிலைமைக்கு வந்ததோ, அவன் இப்போது எங்கே இருக்கிறான் என்பது தெரிய வேண்டும். அவ்வளவுதான். அதிகமொன்றுமில்லை” என்றார்.