பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 செளந்தர கோகிலம்

நேரிட்டு விட்டன. நடுவழியிலேயே போலீஸ்காரன் வழியை மறிந்து முருகேசனை இழுத்துக் கொண்டு போய் விட்டான். பிறகு நான் போலீஸ் இன்ஸ்பெக்டருடைய வீட்டில் மாட்டிக் கொண்டேன். அங்கிருந்து தந்திரமாக நான் தப்பித்து வெளியில் போனால், என்னை அழைத்துப் போன காசாரி மினியனுக்கு தேக அசெளக்கியமும் புத்தி மாறாட்டமும் உண்டாகிவிட்டன. அதன் பயனாக, வண்டி தெற்கே வெகுதூரம் போக, அவ்விடத்தில் நான் சிப்பாயிகளிடம் அகப்பட்டுக் கொள்ள நேர்ந்துவிட்டது. அவையெல்லாவற்றிலும், சற்று நேரத்திற்குமுன் சகலமான சொந்த ஜனங்களுக்கு முன்பு எனக்கு ஏற்பட்ட மானபங்கம் என் உயிரை வாங்கத் தக்கதாகிவிட்டது. அன்றைய தினமாவது என் முகம் அவரது முகத்தில் படும்படி நான் விட்டிருந்ததான சிறிய தவறுக்கு நான் இடங் கொடுத்து விட்டேன். கண்டிப்பாகப் பார்த்தால் அப்போதே நான் என் கற்பை இழந்தவளாகி விட்டேன். அது நல்ல வேளையாக ஜனங்கள் வரையில் எட்டாமல் போய்விட்டது. இப்போது, நான் அந்த இன்ஸ்பெக்டர் விஷயத்தில் அணுவளவு கூடத் தவறான வழிக்கு இடங்கொடாமல் முற்றிலும் பரிசுத்த மாகவே திரும்பி வந்திருந்தாலும், ஜனங்களுடைய மனத்தில், நான் அடியோடு கெட்டுப் போய்விட்டேன் என்ற அபிப்பிராயம் அல்லவா ஏற்பட்டுவிட்டது. படிப்படியாக அபாயங்கள் பெருகி முடிவில் என் உயிருக்கே கால பாசம் வந்து சேரும்படி செய்து விட்டனவல்லவா ஆழ்ந்து யோசிக்க யோசிக்க, இதற்கு முன் நான் கொண்டிருந்த எண்ணம் தவறானதெனத் தெரிகிறது. அவரையும் என்னையும் சேர்த்து வைக்கவே, அபாயங்கள் எல்லாம் நேர்ந்தன. வென்றல்லவா இதற்குமுன் நான் எண்ணி அவைகளைப் பற்றி வருந்தாமல் சந்தோஷமடைந்து கொண்டிருந்தேன். இப்போது பார்த்தால் எல்லாம் வேறுவிதமான அர்த்தத்தைத் தருகிறது. ரோஜா மல்லிகை முதலிய மலர்கள் புஷ்பிக்கும் சமயத்தில் புழுக்கள் சிலவற்றில் புகுந்து, அவற்றை நாசமாக்கிச் சீர்குலைத்து அடியோடு அழித்து விடுவதுபோல, என்னுடைய கற்பையும் சிறிதளவு களங்கப்படுத்தி, எனக்கும், என் குடும்பத்தாருக்கும் என்றும் விலகாத மான ஹானியையும் மதிப்புக் குறைவையும் உண்டாக்கி அடியோடு என் உயிரை வாங்குவதற்கு அவருடைய காற்று வாடையே காலகோடி விஷமாக ஏற்பட்டது போலிருக்