பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்குற்றம் கோடிக் கேடு - பிரயாச்சித்தம் 19

கிறது. குபேர சம்பத்தையும் அபரிமிதமான போக பாக்கியங் களையும் துறந்து நான் என் உயிரைவிட வேண்டியிருக்கிறதே என்பதைப் பற்றி நான் கொஞ்சமும் விசனப்படவில்லை யானாலும், நான் என் கற்பை இழந்துவிட்டேன் என்ற தீராக் களங்கத்தையும், விபரீதமான அபவாதத்தையும் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் உண்டாக்கி வைத்துவிட்டுப் போகிறேனே என்பதுதான் என்னால் தாங்க முடியாத துயர மலையாக இருந்து இப்போது என் உயிரில் பெரும் பாகத்தையும் குடித்து விட்டது. நான் செய்த பிழைக்கு பிராயச்சித்தமாக நான் என்னுடைய ஜீவ தசை முடிய அடையக்கூடிய இம்மைச் சுகம் யாவற்றையும் இழந்து, ஈசனுடைய பொன்னடியில் என்னையே நான் பலியாகக் கொடுத்து விடுகிறேன். அப்போதாவது, கடவுள் என் களங்கத்தை விலக்கி, நான் கன்னி கழியாத பதிவிரதையாகவே இறந்தேன் என்பதை எங்கள் சொந்த ஜனங்கள் உணர்ந்து திருப்தி அடையும்படி செய்தருளுவார் என்பதே என் உறுதியான நம்பிக்கை. இதோ கிணறு வந்துவிட்டது. அதற்குள் இருக்கும் தண்ணிர் அசைவது வாவாவென்று என்னை அழைப்பது போலவே இருக்கிறது. மளமளவென்று போய் விழுந்து விடுகிறேன். இப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் உடனுக்குடன் சரே லென்று நிறைவேற்றிவிடவேண்டும். இல்லாவிட்டால் ஏதாவது இடையூறு நேர்ந்துவிடும். அல்லது என் மன உறுதியில் தளர்வு ஏற்பட்டாலும் ஏற்பட்டுவிடும். நான் வெற்றுடம்போடு விழுந்தால், என் உடம்பு உள்ளே ஆழ்ந்து போகாமல் மேலே மிதக்கும். மரணாவஸ்தைக் காலத்தில் கைகள் ஒருவேளை தாமாகவே பக்கத்திலிருக்கும் படியைப் பிடித்துக் கொள்ளும். அந்த இடையூறுக்கெல்லாம் இடம் கொடுக்காமல் செய்வதைத் திருந்தச் செய்துவிட வேண்டும். ஆகையால், இதோ கிடக்கும் கருங் கல்லை எடுத்து மடியில் இறுகக் கட்டிக்கொண்டு உள்ளே விழுந்து விடுகிறேன்” என்று கோகிலாம்பாள் தீர்மானித்துக் கொண்ட வளாய் எதிரில் கிடந்த கருங்கல்லை எடுத்து மடியில் வைத்துத் தனது முன்தானையைத் தன் உடம்பில் இறுகச் சுற்றி முடிந்து கொண்டு கிணற்றின் கைபிடிச் சுவரின்மீது ஏறி நின்று, ஒரங்களில் நீண்டிருந்த படிகளில் தனது உடம்பு படாதிருக்குமாறு கிணற்றின் நடுப்பாகத்தைப் பார்த்துப் பொத்தென்று குதித்துவிட்டாள்.