பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியாணக் கோலம் - கிரகப்பிரவேசம் 225

போல இருக்கிறாரே என்று கூறித் தமக்குப் பின்னால் நின்ற இன்னொரு சப் இன்ஸ்பெக்டரை அழைத்து, “ஐயா! நீர் இப்படி எதிரில் வாரும்” என்றார். அவர் அப்படியே வந்து நின்றார்.

போலிஸ் கமிஷனர் : நீர் யார் ஐயா? சப் இன்ஸ்பெக்டர் : நான் திருவடமருதூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்.

போலிஸ் கமிஷனர் : இப்போது இங்கே என்ன காரியமாக வந்ததோ?

சப் இன்ஸ்பெக்டர் : சுந்தரமூர்த்தி முதலியார் என்று பெயர் வைத்துக் கொண்டு இதோ இருக்கிறாரே இவரையும், இவருடைய தங்கையையும் பார்க்க வந்தேன்.

போலிஸ் கமிஷனர் : ஆனால் இவருடைய உண்மையான பெயர் அதுவல்லவா?

சப் இன்ஸ்பெக்டர் : அல்ல. இவருடைய பெயர் அண்ணா மலை முதலியார் இவருடைய தங்கையின் பெயர் கமலவல்லி.

போலீஸ் கமிஷனர் : ஒகோ சரி, அது உமக்கு எப்படித் தெரியும்? நீர் இவர்களைப் பார்ப்பதற்காக ஏன் வரவேண்டும்?

சப் இன்ஸ்பெக்டர் : இவர்களுடைய பூர்விகமான ஊர் எதுவென்பது தெரியவில்லை. ஆனாலும், இவர்கள் இவருடைய தகப்பனார் காலத்திலிருந்து திருவடமருதூரில் தான் இருந் தார்கள். அந்தவூரில் குஞ்சிதபாத முதலியார் என்று ஒரு தனிகர் இருந்தார்; இப்போதும் இருக்கிறார். அவரிடம் இவருடைய தகப்பனார் தவசிப் பிள்ளை வேலையில் இருந்தார்.

போலிஸ் கமிஷனர் : ஆ! என்ன! என்ன! இவருடைய தகப்பனார் கோவிந்த புரம் ஜெமீந்தாரல்லவா? அவரா தவசிப்பிள்ளை வேலை செய்வார்? அவருடைய பெயர் ஜெம்புலிங்க முதலியாரா?

சப் இன்ஸ்பெக்டர் : அவருடைய பெயர் இராமலிங்கம் என்பது. எங்கள் ஊரில் அவர் இருந்த வரையில், அவரை எல்லோரும் தவசிப்பிள்ளை இராமலிங்கம் என்று தான் கூப்பிடு வார்கள். முதலியார் என்ற பட்டம் கூட அவருக்கு ஏற்படவில்லை.

செ.கோ.:V-15