பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியாணக் கோலம் - கிரகப்பிரவேசம் 227

அதுவரையில் பொறுமையோடிருந்த போலீஸ் கமிஷனர் பலமான குரலில் ஜனங்களை அதட்டித் தமது ஜெவான்களைப் பார்த்து, “அடேய் ஜெவான்களா சிலர் நம்முடைய அண்ணா மலைக்குப் போலீஸ் கங்கணம் போட்டுக் கொண்டு போய் லக்னம் தவறிப் போவதற்குள் காராகிரகப் பிரவேசம் நடத்தி வையுங்கள். சிலர் கமலவல்லியம்மாளை மரியாதையாக அழைத்துக்கொண்டு போய் அதோ நிற்கும் இரண்டு சாமி யாரிடம் ஒப்புவித்து விடுங்கள். அவர்கள் குஞ்சிதபாத முதலியாருக்காகப் பாடுபடுகிறவர்கள். அந்தப் பெண்ணை அவர்கள் குஞ்சிதயாத முதலியாரிடம் ஒப்புவித்து விடுவார்கள். பெண் கலியாணக் கோலத்தோடு தன் புருஷரிடம் போய்ச் சேரட்டும். அவரும் ஒரு தரம் இறந்து மறுதரம் ஜென்மமெடுத் திருக்கிறார். இந்தப் பெண்ணை இப்போதுதான் புதிதாய்க் கலியாணம் செய்து கொள்வதுபோல அவரும் சந்தோஷப் படட்டும். ஐயா, புதுச்சேரி சப் இன்ஸ்பெக்டரே! உங்களூர்ப் பெண்ணை சட்டப்படி நீர் அழைத்துக்கொண்டு போய் அதனுடைய தாய் தகப்பன்மாரிடம் சேர்த்துவிடும். அவ்வளவே காரியம்’ என்று கூறியபின் அழகியமணவாள முதலியாரை நோக்கி, தாங்கள் எவ்வளவோ பணச்செலவின்மேல், அபாரமான ஏற்பாடுகளையெல்லாம் செய்து, ஜனங்களையும் வரவழைத்துக் கலியானத்தை நடத்த எத்தனித்தீர்கள். இப்பேர்ப்பட்ட எதிர்பாராத இடையூறு நேர்ந்துவிட்டது. கலியாணம் நின்று போகும்படியாக நிலைமை ஏற்பட்டுவிட்டது. ஆயினும், இவ்விதமான தடை ஏற்பட்டது, தங்களுக்குப் பெருத்த நன்மையே. ஆகையால், இதைப்பற்றி தாங்கள் மிகுந்த சந்தோஷமடைய வேண்டுமன்றி என் பேரிலாவது மற்றவர் பேரிலாவது ஆயாச மடைய மாட்டீர்களென்று நம்புகிறேன்” என்றார்.

உடனே அழகிய மணவாளர் புன்னகை தவழ்ந்த முகத்தோடு போலீஸ் கமிஷனரை நோக்கி, “ஐயா! நல்ல சமயத்தில் எனக்கு நீங்கள் செய்த இந்தப் பேருதவியை நினைத்து என் மனம் அடையும் ஆநந்தத்தை நான் எப்படி வெளியிடப் போகிறேன். மனசு என்பது சூட்சுமமான ஸ்தானம். ஆகையால், அதை உங்களுக்கு நான் எப்படிக் காட்டப் போகிறேன்! உங்களுக்கு நான் என் மனமார்ந்த நன்றியறிதலின் பெருக்கை எவ்விதமாகத்