பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமிர்த கலசம் 241

திவான் சாமியார், “நான்தான் இங்கே என்ன செய்கிறேன். உட்கார்ந்திருப்பதைவிட, காலாறக் கொஞ்சதூரம் நடந்துவிட்டு வந்தது நல்லதுதானே. அதைப்பற்றிப் பரவாயில்லை” என்றார்.

உதவிச் சாமியார், “சப் இன்ஸ்பெக்டர் இருவரும் இன்று இரவு வண்டியில் போகிறார்கள். அவர்களுக்கு வசதியான வேறு இடம் அகப்பட்டதாம்; அங்கே இருந்துவிட்டார்களாம். நான் அவர்களுக்கு உபசார வார்த்தைகள் சொல்லிவிட்டு வந்தேன்’ எனறாா.

திவான் சாமியார், “சரி, சந்தோஷம். நாமும் இனி புறப்பட்டு ஊருக்குப் போக வேண்டியதுதானே! நாம் வந்த காரியம் ஆய்விட்டது. இவ்விடத்தில் நமக்குத் தேவையான வசதிகள் இல்லை. ஆகையால், நாமும் ஊருக்குப் போய் விடுவதே நல்லது. ஏன் அப்பா! நாம் இப்போது திருவை யாற்றுக்குப் போகலாமா, திருவடமருதூருக்குப் போகலாமா? எப்போது புறப்படலாம்?” என்றார்.

உடனே உதவிச் சாமியார், ‘நேற்று முழுதும் ரயிலில் பிரயாணம் செய்த அலுப்பு என்னாலேயே தாங்க முடிய வில்லையே. பெரிய ஐயாவுக்கு அது அதிக பாதையாக இருக்கும். ஆகையால், எந்த ஊருக்குப் போவதானாலும், நாம் இன்னம் இரண்டு தினங்கள் பொறுத்துப்போவதே சிலாக்கியமான காரியமென்று நினைக்கிறேன்” என்றார்.

உடனே குஞ்சிதயாத முதலியார் திவான் சாமியாரைப் பார்த்து, ‘சுவாமிகளுக்குத் தெரியாத யோசனையை நாங்களா சொல்லப் போகிறோம். தங்களுக்கு எது யுக்தமாகத் தோன்றுகிறதோ அதன்படிச் செய்ய நான் காத்திருக்கிறேன்” என்றார். -

அதைக்கேட்ட திவான் சாமியார் திடுக்கிட்டுப் போய், “என்ன அப்பா தாங்கள் மறுபடி என்னைப் பார்த்துப் பெரிய மரியாதைப் பதங்களை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டீர்களே! அடியேன் தங்கள் விஷயத்தில் ஏதாவது அபசாரம் செய்து விட்டேனா தாங்கள் என்னை எப்போதும்போல, அப்பா மோகலிங்கம் என்று கூப்பிடாமல், இப்போது புதுமாதிரியாய்க் கூப்பிடுவது என் மனசைப் புண்படுத்துகிறது” என்றார். செ.கோ.:W-16