பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 செளந்தர கோகிலம்

உடனே குஞ்சிதபாத முதலியார், ‘சுவாமிகளே! rமிக்க வேண்டும். நான் இதுவரையில் தங்களை ஒருமைப் பதத்தால் கூப்பிட்டு பெருத்த அபராதியாகி விட்டேன். தாங்கள் வயசில் சிறியவர்களாயிருந்தாலும், தங்கள் காஷாய வஸ்திரம் தீகை, முதலியவற்றின் மகிமை என்ன! உண்மையிலேயே தங்களிடம் இருக்கும் அபாரசக்தியென்ன!. இப்பேர்ப்பட்ட மகானை கேவலம் குடும்பஸ்தனான நான் ஒருமைப் பதத்தால் அழைப்பது மகாபாவகரமான காரியம். தாங்கள் அந்த ஒரு விஷயத்தில் மாத்திரம் என்னைவிட்டு, மற்ற சகலமான காரியங்களிலும் தங்கள் பிரியப்படி என்னை நடத்தலாம்” என்று ஒரே உறுதியாக மொழிந்தார்.

அதைக்கேட்ட திவான் சாமியார் மிகுந்த கலக்கமும் சஞ்சலமும் அடைந்து, “என்ன அப்பா! தாங்கள் இதுவரையில் என் மனசைக் குளிரச்செய்து இப்போது என்னைப் பெருத்த வேதனைக்கு ஆளாக்க எண்ணுகிறீர்களே! எப்படியாவது தாங்கள் கிருபை செய்ய வேண்டும்” என்று கெஞ்சி வேண்டினார். கிழவர், ‘சுவாமிகளே! தங்களை ஏகவசனத்தில் கூப்பிடுவது என் மனசுக்குச் சகிக்கவில்லை. நான் மரியாதைப் பதத்தால் அழைப்பது தங்கள் மனசுக்குச் சகிக்கவில்லை. இருவருக்கும் துன்பமில்லாத படி இதற்கு ஒரு பரிகாரம் செய்துவிடலாமென்று நினைக்கிறேன். தாங்கள் தங்களுடைய தீrை காஷாயம் முதலியவைகளை விலக்கிவிட்டு, எங்களைப் போல ஆடைகள் தரித்துக் கொள்ளுங்கள். அப்போது நான் கூசாமல் தங்களை முன்போல அழைக்கிறேன், அதுதான் நல்ல யுக்தியாகப்படுகிறது” என்று கூறிவிட்டு, தாம் அந்த முடிவை மாற்றத் தயாராக இல்லை என்பதை திவான் உணரும் பொருட்டு, கமலவல்லி இருந்த அறைக்குள் போய்விட்டார்.

உடனே திவான் சாமியார் உதவிச் சாமியாரை நோக்கி, ‘சுவாமிகளே! அப்பா என்ன காரணத்தினால் இப்படி திடீரென்று பிடிவாதம் பிடிக்கிறார்கள்?’ என்றார்.

உதவிச் சாமியார், “இதற்கு வேறு காரணம்கூட வேண்டுமா. அவர்களே தான் காரணத்தைச் சொல்லுகிறார்களே, அது சரியான காரணமாகத்தான் படுகிறது. தாங்கள் தங்களுடைய மனத் திருப்தியை மாத்திரம் கருதுகிறீர்கள். அவர்கள் வயசு முதிர்ந்த