பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 செளந்தர கோகிலம்

உடனே உதவிச் சாமியார் எழுந்து நின்று அழகிய மண வாளரை நோக்கி, ‘ஐயா கனவானே! பார்த்தீர்களா? நான் செய்த காரியத்தால் எத்தனை பேர் சந்தோஷமடைகிறார்கள். நிலைமை இப்போது எப்படி மாறுபட்டுப் போனது பார்த்தீர்களா! இவர்களுடைய பூர்வ வரலாறு தங்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரியாதிருப்பதுபற்றி, நீங்கள் நாங்கள் அடைகிறதுபோல அவ்வளவு அபாரமான சந்தோஷம் அடைய இயலவில்லை. நேற்று கமலவல்லியென்ற பெண்ணை அழைத்துக்கொண்டு போனோ மல்லவா. அந்தப் பெண்ணின் புருஷர்தான் இந்தப் பெரியவர். இவர்கள் திருவடமருதூரில் பெருத்த சீமான். இவர்களுடைய புத்திரர்தான் இதோ பக்கத்தில் இருப்பவர்கள். இவர்கள் எம்.ஏ. பரீட்சையில்தேறி பல ஜில்லாக்களில் பெரிய கலெக்டர் வேலையில் இருந்து, சென்னை கவர்னரிடம் காரியதரிசி வேலை பார்த்து, கடைசியில் மாதம் ரூ. 5000-ம் சம்பளத்தில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் திவானாக இருந்தவர்கள். சுமார் 7 வருஷத்திற்கு முன்பு, இந்தப் பெரியவர் தம்முடைய புத்திரருக்கு ஒரு கடிதம் எழுதி, திருவடமருதூர் கோவிலில் நடந்த உத்சவத்துக்கு வரும்படி அழைத்தார்கள். திவான், தங்கள் சம்சாரத்தையும் குழந்தையையும் அனுப்பினார்கள். அப்போது திருவடமருதூரில் இருந்த சுந்தரமூர்த்தியென்கிற அண்ணாமலை யின் தகப்பனார் இராமலிங்கம் என்பவனும், அவனுடைய சம்சாரமும் தங்கள் பெண்ணான கமலவல்லியை இந்தப் பெரியவருக்குக் கட்டிக்கொடுத்து இவர்களுடைய சொத்து முழுவதையும் அபகரித்துவிட வேண்டுமென்று நினைத்து, திவானுக்குப் பாஷாணம் போட்டுக் கொன்றுவிட ஏற்பாடு செய்ததன்றி, திருவடமருதூருக்கு வந்திருந்த இந்த அம்மாளிடம் இந்தப் பெரியவரைப் பற்றி தகாத வார்த்தைகளையெல்லாம் கூறினார். பெரியவர் அம்மாள்மீது துராசை கொண்டிருப்பதாகவும் வேறு பலவாறாகவும் சொன்னதைக் கேட்டு அம்மாள் பயந்து கொண்டு இரவோடிரவாய் குழந்தையையும் அழைத்துக்கொண்டு திருவடமருதூரை விட்டுத் திருவனந்தபுரத்துக்குப் போக ஆரம் பித்தார்கள். அவ்விடத்தில் அதற்குள், திவானுக்கு விஷம் வைக்கப் பட்ட முயற்சி தெய்வத்தின் அருளால் தடைப்பட்டுப் போனதன்றி, இராமலிங்கத்தின் சூழ்ச்சியினால் திவான் தமது மனைவியாரின்