பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமிர்த கலசம் 265

மேலும் சம்சயங்கொள்ள நேர்ந்தது. ஆகையால் திவான் தாம் காட்டில் புலியினால் அடிபட்டு இறந்து போனதாகக் காட்டி விட்டு சாமியார் போல உருமாறி வந்து பார்க்க, அம்மாளும் குழந்தையும் காணப்படவில்லை. பெரியவர் கமலவல்லியைக் கலியாணம் செய்து கொள்ளும் சமயத்தில் இருந்தார்கள். அதன் பிறகு, இந்த அம்மாளும் குழந்தையும் திவான் இறக்கவில்லை யென்ற சந்தேகத்தைக் கொண்டு அவர்கள் பாட்டில் ஊரூராய்ச் சென்று இவர்களைத் தேடிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். திவான் அவர்களைத் தேடி அலைந்து கொண்டிருந்திருக்கிறார்கள். ஒருவரையொருவர் இந்த நிமிஷம் வரையில் சந்திக்க இயலாமல் போய்விட்டது. ஏழு வருஷ காலமும் இவர்கள் எல்லோரையும் ஏழரை நாட்டுச் சனியன் பிடித்திருந்தது இப்போதுதான் நீங்குகிறது. பெரியவரும் நடுவில் இறந்து மறுஜன்மம் எடுத்துத் தமது பழைய ஐசுவரியத்தையும் மனைவியையும் அடைந்தார்கள், இன்று அவர்களது புத்திரரையும், புத்திரர் சம்சாரம், குழந்தை களையும் காண்கிறார்கள். இவர்களுக்கு இப்போது பல லக்ஷத்திற்கு சொத்துகள் இருக்கின்றன. இங்கிருந்த சில கனவான்கள் சொன்னதுபோல, இவர்கள் எளியவர்களல்ல. இந்த அம்மாளும் அமங்கலியல்ல. தங்களுக்கு ஏற்பட இருந்த களங்கமும் உண்மையானதல்ல. ஆகையால், இனி கலியாணத்தை நடத்தலாம்” என்றார்.

அவர் அவ்வாறு கூறி வாய்மூடுமுன் ஜனக் கும்பலில் இன்னொரு பாகத்தில் இருந்த கூடலூர் டிப்டி கலெக்டர் துள்ளிக் குதித்து ஆவேசம் கொண்டவர் போலவும் பைத்தியக்காரர் போலவும் எழுந்தோடி வந்து திவான் முதலியாருக்கும் காந்திமதி யம்மாளுக்கும் எதிரில் சாஷ்டாங்கமாக விழுந்து, “ஆகா! எங்கள் குலதெய்வமா இங்கே வந்து தரிசனம் கொடுக்கிறது: என்னப்பனே! அருங்குணப் பெருந்தகையீர்! தங்களுடைய திருவருட் பெருங் கருணையால், அடியேன் இப்போது கூடலூரிலேயே டிப்டி கலெக்டர் உத்தியோகம் பார்க்கிறேன். நான் பெருத்த குடும்பி. நாங்களெல்லோரும் சாப்பிடும் அன்னம் தாங்கள் அளித்த பிச்சை ஒவ்வொரு வேளையிலும் நாங்கள் எல்லோரும் தங்களை ஸ்தோத்திரம் செய்துதான் போஜனம் செய்கிறது. அடியேன் குடிசையில்தான் என் தாயும் தங்கள் உத்தம பத்தினியுமான இந்த