பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 செளந்தர கோகிலம்

ஆபரணங்கள் மாங்கலியம் முதலியவற்றை அணிவித்து அழைத்து வந்தனர். மறுபடி கலியான முழக்கம் ஆரம்பமாயிற்று. மூன்றாவது தடவையே நிச்சயமானதென்று நினைத்து வாத்தியக்காரர்கள் முன்னினும் அதிக பலமாய் முழக்கத் தொடங்கினர். ஸ்திரீகள் எல்லோரும் பன்மடங்கு அதிகரித்த குது.ாகலத்துடன் மங்கள கீதம் பாடினர். வைதீகர்களும் அளவற்ற ஊக்கங்கொண்டு வேத முழக்கம் செய்தனர். அந்த பிரமாண்ட மான கலியாண மண்டபத்தில் கூடியிருந்த ஆண்பாலார் பெண் பாலார் குழந்தைகள் முதலிய சகலமானவர்களது மனதும் ஒரே ஆநந்த நிறைவாய் பொங்கியிருந்த நிலைமையில், ராஜாபகதூர் கோகிலாம்பாளுக்கும், அழகிய மணவாளர் செளந்தரவல்லி யம்மாளுக்கும் திருமாங்கவிய தாரணத்தை நடத்தினார்கள்.

x 

அன்று முதல் மூன்று தினங்கள் வரையில் அந்தப் பங்களா சுவர்க்கலோகம் போலவே விளங்கியது. விருத்தினர் எல்லோரும் தமது வீட்டையும் ஜோலிகளையும் சொந்த கவலைகளையும் மறந்து அவ்விடத்திலேயே இருந்து மாறி மாறி விருந்துண்டு, சிற்றுண்டி சாப்பிட்டு, சங்கீதம் கேட்டு, சந்தனம் பூசி, தாம்பூலமணிந்து, தூங்கியெழுந்து குழந்தைகள்போல ஒடியாடி, ஒருவரோடொருவர் பரிகாசம் செய்து சிரித்து விளையாடிப் பொழுதைப் போக்கினார்கள். திவான் முதலியாரும் காந்திமதி யம்மாளும், குஞ்சிதபாத முதலியாரும் கமலவல்லியும் அவரவர்க்கு விடப்பட்ட தனி விடுதிகளில் ஆநந்தமாக தனித்திருந்து ஒருவரிடத்தொருவர் பேசவேண்டிய விஷயங்கள் அனைத்தையும் பன்முறை சொல்லிச் சொல்லி ஆறாமல் திரும்பத் திரும்ப அவற்றையே பேசி இன்பக் கடலில் மூழ்கி இருந்தனர். காந்திமதியம்மாளும் ராஜாபகதூரும் திருவிட மருதூரிலிருந்து ரகஸியமாய் போன சமயத்தில், சுந்தரமூர்த்தி முதலியாரும், புஷ்பாவதியும் சிறு வயதினராக இருந்தனர். அதுவுமன்றி, அப்பொழுது இராமலிங்கத்தின் குடும்பத்தினர் வேறு தெருவில் தனியாக ஜாகை வைத்துக் கொண்டிருந்தனர். இராமலிங்கத்தின் மனைவி மாத்திரம் குஞ்சிதபாத முதலியாரது மாளிகைக்கு அடிக்கடி வந்து, தனது புருஷனுக்கு உதவியாக