பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமிர்த கலசம் 267

சந்தோஷத்தைவிடப் பன்மடங்கு அதிகரித்த சந்தோஷமடைந்து, “ஆகா அப்படியா நீ நல்ல வழிக்கு வந்து மேலான பதவிக்கு வந்திருக்கிறாயா நிரம்பவும் சந்தோஷமாயிற்று. சர்வேசனுடைய கிருபையால், நீ இன்னமும் மேலான பதவியை அடைவாய் என்று நம்புகிறேன்” என்றார். அப்போது டிப்டி கலெக்டருக்குப் பக்கத்தில் வந்திருந்த அவரது ஜனங்கள் திவானையும், காந்திமதியம்மாளையும் நிரம்பவும் பணிவாகவும் மனமார்ந்த நன்றியறிதலோடும் நமஸ்கரித்தனர். அந்தப் புதிய வரலாற்றைக் கேட்ட காந்திமதியம்மாளும் அளவற்ற சந்தோஷமும் பூரிப்பும் அடைந்து அளவளாவினாள்.

அங்கு நடந்த சம்பவங்களையெல்லாம் கேட்டுப் பேருவகை கொண்டு பேராநந்தத்தில் தோய்ந்து நின்ற அழகிய மணவாள முதலியார் தமது மணையை விட்டு வந்து திவான் முதலியாரது கையையும் அவரது தந்தையின் கையையும் வாஞ்சையாகப் பிடித்து, ‘புண்யாத்மாக்களே! இப்பேர்ப்பட்ட மகா பெரியவர் களான தங்களுடைய தரிசனமும், பந்துத்வமும் எங்களுக்கு ஏற்படுவதைப் பற்றி என் மனம் அடையும் ஆநந்தத்தை நான் என்னவென்று சொல்லப் போகிறேன்! தாங்கள் நிற்க வேண்டாம். கலியாணப் பந்தல்களுக்கு முன்னால் வந்து தாங்கள் இருவரும் சபாநாயகர்களாய் அமர்ந்து கொள்ளுங்கள். லக்னம் தவறிப் போவதற்குள் முகூர்த்தத்தை நடத்துவோம்” என்று கூறி அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு போய் முன் வரிசையில் இருந்த ஆசனங்களில் உட்கார வைக்க, அவரது தந்தையும் வந்து அவர்களுக்கு முகமன் கூறி உபசரித்து வரவேற்றார். அழகிய மணவாளரின் தாயாரும், பூஞ்சோலை யம்மாளும், மற்றுமுள்ள ஸ்திரீகளும் காந்திமதியம்மாளைச் சூழ்ந்து எல்லோரும் ஆசையோடு கட்டித் தழுவினர். அப்பொழுது கோகிலாம்பாள் அடைந்த ஆநந்தம் எப்படி இருந்தது என்பதைக் கூற நமது எழுதுகோல் வல்லமையற்றது என்றே கூறவேண்டும். அவள் நேராக சுவர்க்கலோகத்திற்குள் கொண்டு போய்விடப்பட்டவள்போல ஆநந்தப்பெருக்கில் ஆழ்ந்து அப்படியே மயங்கி நிற்கிறாள். எல்லோரும் உடனே காந்திமதியம்மாளைப் பக்கத்திலிருந்த ஒர் அறைக்குள் அழைத்துப்போய் அந்த அம்மாளுக்கு உயர்ந்த ஆடைகள்