பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 செளந்தர கோகிலம்

விட்டுக் கோர்ட்டாரவர்களுடைய அரிய பொழுதை வீணாக்க நாங்கள் விரும்பவில்லை. குற்றவாளியே தாம் இந்தக் குற்றத்தைச் செய்ததாக ஒப்புக் கொள்ளுவாரென்று நாங்கள் நம்புகிறோம். ஆகையால் தக்க மனிதராய்ப் பொறுக்கி நாலைந்து சாட்சிகளை மாத்திரம் கோரி இருக்கிறோம். அவர்களுடைய சாட்சியும் போதாதென்று நியாயாதிபதிகள் கருதும் பட்சத்தில் இன்னம் தேவையான சாட்சிகளை விடக் காத்திருக்கிறோம். இந்த வழக்கின் சாராம்சம் என்னவென்றால், கண்டியூர் பெருமாள் கோவிலில் இப்போது பிரம்மோத்சவம் நடந்துகொண்டிருக்கிறது. நேற்று எட்டாவது திருநாளாகையால் வெண்ணெய்த் தாழி சேவை நிரம்பவும் விமரிசையாக நடத்தப்பட்டது. சுவாமி கோவிலை விட்டுப் புறப்பட்டு ரஸ்தாவோடு வந்து கொண் டிருந்தார். சுமார் ஐம்பதினாயிரம் ஜனங்கள் சுவாமிக்கு முன்னும் பின்னுமாக நிறைந்து கூடவே வந்தனர். அப்போது கண்டியூர் மேலப்பண்ணை முதலியாருடைய சம்சாரம் தங்கள் கைக்குழந் தையுடன் சுவாமி தரிசனத்துக்கு வந்து ஜனக் கும்பலில் அகப் பட்டுக் கொண்டார். அவர்கள் தக்க பெரிய மனிதர்களாகையால் அந்த அம்மாளின் மேலும் குழந்தையின்மேலும் விலையுயர்ந்த நகைகள் ஏராளமாக இருந்தன. நெருக்கடியான ஒரிடத்திற்கு அவர்கள் வந்த சமயத்தில் அம்மாளுக்குப் பின்புறமாக நின்றவர், முதுகுப் பக்கத்தில் தொங்கிய குழந்தையின் கைவிரலிலிருந்த வைர மோதிரத்தைக் கழற்றிக் கொண்டதன்றி, ஏதோ ஒர் ஆயுதத்தைக் கொண்டு குழந்தையின் கழுத்திலிருந்த சங்கிலியை வெட்டி எடுத்த சமயத்தில், அது குழந்தையின் கழுத்தில்பட குழந்தை திமிறவும் அழவும் ஆரம்பித்ததைக் கண்ட அம்மாள் அதன் கழுத்தைப் பார்க்க, சங்கிலி காணப்படவில்லை. குழந்தை யின் கழுத்தில் வீக்கமும், இரத்தக் கசிவும் இருந்தன. உடனே அம்மாள் கூச்சலிட்டார்கள். உடனே ஜனங்கள் அம்மாளுக்குப் பக்கத்தில் நெருங்கி நின்ற மனிதர்களை வெளியில் விடாமல் வளைத்துக்கொண்டு ஒவ்வொருவராய்ச் சோதனை போட்டுப் பார்த்ததில், குழந்தைக்குப் பக்கமாக நின்று கொண்டிருந்த இந்த மனிதருடைய சட்டைப் பைக்குள் சங்கிலியின் ஒரு பாகம் இருந்து அகப்பட்டது. அதன் இன்னொரு பாகமும், வைர மோதிரமும் அகப்படவே இல்லை. அந்த இடத்தில் தரையை