பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 செளந்தர கோகிலம்

கிறதாகப் படுகிறதோ, அதற்குத் தக்க தண்டனையை கோருகிறேன். குழந்தையின் கையிலிருந்த மோதிரத்தின் விலை ரூபாய் ஐந்நூறு. முகப்புள்பட சங்கிலியின் விலை ரூபாய் இரண்டாயிரத்து முன்னுாறு. இவையன்று தக்க பெரிய மனித ருடைய குழந்தையின் உடம்பு காயப்பட்டுப் போய்விட்டது. இத்தனைக்கும் சேர்ந்து அவர்களுக்குச் சுமார் ஐயாயிரம் ரூபாய் வரையில் நஷ்ட ஈடு செய்து கொடுப்பதும் நியாயமாக இருக்கிறது. அது விஷயத்திலும் கோர்ட்டாரவர்கள் தக்க உத்தரவு பிறப்பிக் குமாறு கேட்டுக் கொள்ளுகிறேன். இதுதான் வழக்கின் சாராம்சம். இனி முதல் சாட்சி மேலப்பண்ணை முதலியாரைக் கூப்பிடலாம்” என்று கூறிவிட்டு உட்கார்ந்து கொண்டார்.

உடனே மேலப்பண்ணை முதலியாரைச் சேவகன் கூப்பிட, அவர் தமது குழந்தையை எடுத்துக்கொண்டு வந்து சாட்சிக் கூண்டின்மேல் நின்று நியாயாதிபதிக்கு நமஸ்காரம் செய்தார். அவரது மினுமினுப்பான தேகமும், அவர் மீதிருந்த ஜரிகை வஸ்திரங்களும், வைரக் கடுக்கன், வைர மோதிரங்களும் ஒன்றுகூடி, அவர் தக்க பெரிய மனிதர் என்பதை எளிதில் வெளிப் படுத்தின. குழந்தையும் செழுமையான தோற்றமும் முகக்களையும் உடையதாய் இருந்ததன்றி, ஏராளமான ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அவ்வாறு குழந்தையோடு மேலப்பண்ணை முதலியார் வந்து நிற்க, நீதிபதி அவரையும் குழந்தையையும் பார்த்து மேலான அபிப்பிராயமும் மதிப்பும் கொண்டவராய் அவரிடம் நிரம்பவும் மரியாதையாகவே வார்த்தையாடத் தொடங்கினார். கச்சேரியில் கூடியிருந்த ஜனங்கள் எல்லோரும் குழந்தையோடு பெரிய மனிதர் கச்சேரிக்கு இழுக்கப்பட்டிருந்ததைக் கண்டு சகியாதவராய் அந்த ஆத்திரத்தைத் திவான் சாமியார் மீது திருப்பி தணிவான குரலில் அவரைத் தாறுமாறாக தூவிக்கத் தொடங்கினர். மிகுந்த ஏக்கமும், கவலையும் கொண்டு வெட்கிச் சோர்ந்து தலை குனிந்து நின்ற திவான் சாமியார் தமது கடைக்கண் பார்வையால் மேலப்பண்ணை முதலியாரையும் அவரது குழந்தையையும் பார்த்துவிட்டு முன்னிலும் அதிகமாய்க் கீழே குனிந்து கொண்டு, “ஈசா இதுவும் உன் திருவிளையாடலா!’ என்று தமக்குத் தாமே