பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செளந்தர கோகிலம்

15-ஆவது அதிகாரம் தொடர்ச்சி

காணிக்குற்றம் கோடிக் கேடு- பிரயாச்சித்தம் புஷ்பாவதி, “ஆமாம்மா! நீங்கள் சொல்வது உண்மையான சங்கதிதான். இருந்தாலும் நாங்கள் உங்களுக்கு அவ்வளவு பிரமாதமான உதவி எதையும் செய்துவிடவில்லை. அப்பேர்ப் பட்ட உதவி எதுவும் உங்களுக்குத் தேவையான நிலைமையில் நீங்களும் இருக்கவில்லை. ஆதி முதல் நாங்கள் உங்களுக்குச் செய்வதெல்லாம் வாய் வார்த்தையாகிய உதவிதான். மனசில் பிரியமிருப்பதை நாங்கள் வாய் வார்த்தையால் காட்டி, உங்களுக்கு வரும் தொந்தரவை எங்களுக்கு வந்த தொந்தரவைப் போல உணர்கிறோம். அவ்வளவுதான் நாங்கள் செய்கிறோம். வேறொன்றுமில்லை. இதை நீங்கள் ஒரு பெரிய சங்கதியாகப் பாராட்டி ஏன் பேசுகிறீர்கள் அது இருக்கட்டும். நம்முடைய கோகிலா வெளியில் போயிருந்தது சம்பந்தமாக என் மனசில் ஒரு சந்தேகம் உண்டாகிக் கொண்டே இருக்கிறது. சிறைச்சாலை யில் இருக்கிற முதலியார் தாம் இருக்கும் இடத்துக்கு வரும்படி யல்லவா கடிதம் எழுதி இருக்கிறார். நம்முடைய கோகிலா போலீஸ் இன்ஸ்பெக்டருடைய வீட்டுக்குப் போக வேண்டிய காரணமென்ன? அதுதான் எனக்கு விளங்கவில்லை. உங்கள் குடும்ப சம்பந்தமான விஷயங்களில் நான் தலையிட்டு, ரகசியங்களை அறிய முயற்சிப்பது தகாத காரியம். ஆனாலும், என் மனசை வதைத்துக் கொண்டிருக்கும் சங்கதியை உள்ளபடி வெளியிட்டு விட்டேன். உங்களுக்கு யுக்தமாகத் தோன்றினால், சொல்லலாம், இல்லாவிட்டால், சொல்ல வேண்டுமென்ற கட்டாயமில்லை’ என்று நிரம்பவும் நயமாகக் கூறினாள்.

உடனே கோகிலாம்மாள் தான் அன்றைய தினம் காலையில் பங்களாவிலிருந்து புறப்பட்டுச் சென்றது முதல் போவீஸ் இன்ஸ் பெக்டரது வீட்டிற்குள்ளிருந்து தந்திரமாகத் தப்பி வெளியில் வந்தது வரையிலுள்ள வரலாறு முழுதையும் விரிவாக எடுத்துக்