பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 செளந்தர கோகிலம்

பிராசிகூடிங் இன்ஸ்பெக்டர் நீதிபதியை நோக்கி, “ஆகா! எவ்வளவு குறும்புத்தனம் பார்த்தீர்களா தன்னுடைய நியாயம் தனக்கே தெரியவில்லையாமே!” என்றார். உடனே நீதிபதி கைதியை நோக்கி, “சரி, உம்முடைய இஷ்டம், அதிருக்கட்டும். இப்போது மேலப்பண்ணை முதலியார் வாக்குமூலம் கொடுத்ததைக் கேட்டீரே! இதில் ஏதாவது குறுக்கு விசாரணை செய்ய நீர் இஷ்டப்படுகிறீரா? எதையாவது கேட்க வேண்டுமானால் கேட்கலாம்” என்றார்.

திவான் சாமியார், “மேலப்பண்ணை முதலியாரவர்கள் பெரிய பிரபுவென்பது தெரிகிறது. இவர்கள் பிரமாணத்தின்மேல் கொடுத்த வாக்குமூலத்தில் முக்கியமான ஒரு விஷயத்தில் பொய் பேசி இருக்கிறார்கள். அதை நான் இப்போது எடுத்துக் காட்டவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. மற்றவர்களுடைய விசாரணையெல்லாம் முடிந்தபின், நான் குற்றவாளிதானென்று கோர்ட்டாரவர்களுக்குப் படும் பrத்தில், அப்போது இந்த சாட்சியை மறுபடி வரவழைத்து நான் குறுக்கு விசாரணை செய்வதற்கு மாத்திரம் அநுமதி கொடுக்க வேண்டும். அதோடு இன்னொரு வேண்டுகோளும் இருக்கிறது. இந்த சாட்சியின் சம்சாரமான அம்மாள் நேற்றைய தினமே கும்பலில் அகப்பட்டு நிரம்பவும் கஷ்டத்திற்கு இலக்காகி விட்டார்கள். ஸ்திரி ஜாதியாகிய அவர்களை இத்தனை ஜனங்களுக்கு முன்னால் இந்தக் கச்சேரிக்கு வரும்படி செய்வது அவ்வளவு மரியாதையாகப் படவில்லை. அவர்கள் போலீசாரிடம் என்ன வாக்குமூலம் கொடுத்தார்களோ அதை அப்படியே நியாயாதிபதியவர்கள் எடுத்துக் கொள்ளலாம். அதைப்பற்றி எனக்கு ஆட்சேபணையே இல்லை” என்று நிரம்பவும் மரியாதையாகக் கூறினார்.

அவர் கூறிய சொற்களைக் கேட்டு நியாயாதிபதியும் மற்றவர்களும் நிரம்பவும் ஆச்சரியமடைந்தனர். மேலப் பண்ணை முதலியார் பொய்ச் சாட்சி சொல்லி இருக்கிறார் என்று அவர் கூறியது எதைப்பற்றியென்று யோசிப்போரும், தக்க பெரிய மனிதரை அவர் அவ்வாறு தூஷித்துவிட்டாரே என்று பதைத்து ஆத்திரங்கொள்வோரும், அவரது மனைவியைச் சாட்சியாக அழைத்து உபத்திரவப்படுத்த வேண்டாமென்று