பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது 3

அதைக்கேட்ட நற்குணவதியான அவரது மனையாள் ஒடோடியும் சென்று பயபக்தி விநயத்தோடு திவான் சாமியாருக்கு எதிரில் மண்டியிட்டுப் பன்முறை வணங்கியெழுந்து குனிந்து நின்று, ‘சுவாமிகளே! தெரியாத் தனத்தினால் இந்த ஏழை தங்கள் விஷயத்தில் பெரிய அபசாரம் செய்துவிட்டேன்! பிழை பொறுத்தருள வேண்டும், ஆண்டவனே!” என்று கூறித் தனது கன்னங்களில் பன்முறை அடித்துக் கொண்டாள்.

அவர்கள் இருவரும் தம்மிடம் நடந்துகொண்ட மாதிரியைக் கண்ட திவானும் அபாரமாகப் பொங்கியெழுந்த தமது மன வெழுச்சியைத் தாங்கமாட்டாதவராய் ஆனந்தக் கண்ணிர் சொரிந்து விம்மி விம்மி அழுகிறார். நீதிபதி முதல் சகலமான ஜனங்களும் திடுக்கிட்டுப் பிரமித்துப் போயினர். எல்லோருக்கும் உரோமம் சிலிர்த்துப் போயிற்று. அந்த மகா உருக்கமான காட்சியைக் கண்டு பெரும்பாலோர் ஆனந்தக் கண்ணிர் விடுத்து, “ஐயோ! என்னப்பா முதலியாருடைய குணத்தழகே அழகப்பா அவரைவிட அவருடைய சம்சாரம் பன்மடங்கு சிறந்தவளாகவே இருக்கிறாள்! இவர்களுடைய நிலைமை என்ன யோக்கியதை யென்ன! ஆதியில் இவர்களுக்கு உதவி செய்தவரைக் கண்டவுடன், இவர்கள் வீண் கெளரதை பாராட்டாமல், தங்கள் பணிவையும், நன்றியறிதலையும் எப்படிக் காட்டுகிறார் களப்பா இவர்களல்லவா உத்தமமான மனிதர்கள்! இவர்களுக்கு

ஈசுவரன் ஒரு நாளும் ஒரு குறைவையும் வைக்கமாட்டான்.

இந்தச் சாமியார் இதற்கு முன் உன்னதமான நிலைமையிலிருந்து அமோகமாக வாழ்ந்தவர் போலிருக்கிறது. ஆதியிலிருந்து இவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் இவர் கேவலமான பிச்சைக் காரப் பரதேசியல்லவென்பதை நன்றாகக் காட்டியது. கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்று சொல்வது பொய்யாகுமா” என்று ஒருவர்க்கொருவர் கூறிக்கொண்டனர்.

புருஷரும் மனையாளும் மாறிமாறித் தமக்கு நமஸ்காரம் செய்து, தம்மை அபாரமாக ஸ்தோத்திரம் செய்துகொண்டே இருந்ததைக் கண்ட திவான் சாமியார் மேலப்பண்ணை முதலியாரின் மனையாளை நோக்கி, ‘அம்மா! உங்களை நான் மகாலகடிமியென்றும், பாக்கியவதியென்றும் சொன்னதை