பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது 65

கருத்துடனேயே நான் இதை எடுத்துக்கொண்டு வந்ததன்றி, இதை என் சொந்த உபயோகத்திற்குச் செலவு செய்வதற்கன்று” என்றார். உடனே மேலப்பண்ணை முதலியார் நீதிபதியை நோக்கிப் பணிவாக மொழியத் தொடங்கி, “நியாயாதிபதி அவர்களே! இந்தப் புண்ணிவான் மகா பெரிய அந்தஸ்திலும் செல்வத்திலும் இருந்தவர்கள். நளன், தருமராஜன், அரிச்சந்திரன் முதலியார் நாடு நகரங்களையும் பெண்டு பிள்ளைகளையும் இழந்து வந்தது போல வந்திருக்கிறார்கள். காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது போல, இவர்களிடம் சங்கிலித் துண்டு இருந்ததைக் கண்டு, எல்லோரும் இவர்களைத் திருடரென்று பிடித்துக் கொண்டார்களேயன்றி வேறல்ல. இவர்கள் இனி ஒரு rணநேரம் கைதிக் கூண்டில் நின்றால், தர்ம தேவதை நம்மெல்லோருடைய கண்களையும் அவித்துவிடும். ஆகையால் தயவு செய்து உடனே இவர்களை விட்டுவிடுங்கள். எங்க ளுடைய நகை போனால் போகிறது. இவர்களிடம் இப்போது இருப்பதைப்போல எத்தனையோ பங்கு அதிகமான செல்வத்தை வைத்து ஆண்டவர்கள்! நான் வைத்து ஆளும் மேலப்பண்ணை இவர்கள் கொடுத்த பிச்சையேயன்றி வேறல்ல. என் சம்சாரத்தின் மேலும் என் குழந்தையின் மேலும் இருக்கும் நகைகளெல்லாம் இவர்கள் கொடுத்த பணத்தினால் ஆனவைகளே. நிரபராதியான இந்தப் பரம புருஷரை இனியும் அவமானத்துக்கு ஆளாக்காமல் நீதிபதியவர்கள் உடனே அனுப்பிவிட வேண்டுமாய்ப் பிரார்த்திக்கிறேன்” என்று நிரம்பவும் நயமாகவும் உருக்கமாக வும் கேட்டுக் கொண்டார்.

உடனே நீதிபதி சிறிதுநேரம் தமது சிரத்தைத் தடவி ஆழ்ந்து யோசனை செய்தபின் பிராசிகூடிங் இன்ஸ்பெக்டரது முகத்தை நோக்கினார். அவர் தமது அபிப்பிராயத்தை அறிய விரும்புகிறா ரென்று உணர்ந்து கொண்ட பிராசிகூடிங் இன்ஸ்பெக்டர் எழுந்து நின்று, ‘நமக்குக் கிடைத்திருக்கிற சாட்சியங்களின்மேல் நாம் இதற்கு முடிவு சொல்ல வேண்டுமன்றி, கைதிக்கும் முதல் சாட்சிக்குமுள்ள ரகஸியமான சம்பந்தங்களையெல்லாம் ஒர் ஆதாரமாக எடுத்துக்கொள்ள சட்டம் இடங்கொடுக்காதென்று நினைக்கிறேன். கைதி ரகவியமாய் ஏதோ விஷயத்தை

Q&.GIr.HV-5