பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 செளந்தர கோகிலம்

சாட்சியின் காதில் தெரிவித்தாரென்பது உண்மைதான். அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ‘நீர் இந்த மாதிரி ஒரு கட்டுக் கதையைச் சொல்லி என்னைத் தப்பவைத்துவிடும், என்னிடமுள்ள பணத்தில் ஏதாவது உமக்குச் சன்மானம் செய்கிறேன்’ என்று இந்தக் கைதி இவருடைய காதில் சொன்னாலும் சொல்லி இருக்கலாமென்று இங்கிருக்கும் ஜனங்களில் யாராவது ஒருவர் சொல்லுகிறதாக வைத்துக் கொள்ளுவோம். அப்படி வியாக்கியானம் செய்வதற்கும் இடம் இருக்கிறதல்லவா. ஆகையால், இதையெல்லாம் கோர்ட்டா ரவர்கள் யோசனை செய்து, சட்டப்படி நீதி செலுத்த வேண்டுமாய் நான் கேட்டுக் கொள்ளுகிறேன்” என்று கூறிவிட்டு உட்கார்ந்து கொண்டார். உடனே நீதிபதி மேலப்பண்ணை முதலியாரைப் பார்த்து, ‘ஐயா முதலியாரே! நீங்கள் இப்போது இவ்விடத்தில் நடந்து கொண்ட மாதிரியிலிருந்து, இந்தப் பரதேசி இதற்கு முன் தக்க பெரிய நிலைமையில் இருந்தவர் என்பதும், இவர் உங்களுக்குப் பொருளுதவி செய்தாரென்பதும், இப்போது இவர் ஏதோ விரக்தியின் பேரில் உலகைத் துறந்து இப்படி வந்திருக்கிறார் என்பதும், இவர் குழந்தையின் நகைகளைக் களவாடவில்லையென்பதும் உண்மையாக இருக்கலா மென என் மனசில் படுகிறது. பிராசிகூடிங் இன்ஸ்பெக்டர் செய்த விபரீதமான வியாக்கியானத்தை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. கைதி இரண்டொரு நிமிஷம் ஏதோ சில வார்த்தை களைச் சாட்சியின் காதில் தெரிவித்தவுடனே, அவர் தம்முடைய மேம்பாட்டையும் கவனிக்காமல், இத்தனை ஜனங்களுக்கும் எதிரில் வேண்டுமென்று இப்படிப் பொய் நாடகம் நடிப்பது அசம்பாவிதமான காரியம். இந்தக் கைதி மகா புத்திசாலியாகவும், ஆழ்ந்த விவகார ஞானமுடையவராகவும் இருக்கிறார். இந்தக் குற்றத்திற்கு இவருக்குத் தண்டனை கிடைத்தால், சுமார் ஆறுமாத காலத்திற்குத் தண்டனை கிடைக்குமென்பது இவருக்குத் தெரிந் திருக்கும். அதற்காக இவர் சாட்சிக்கு ல்ஞ்சம் கொடுப்ப தென்றால், அதிகமாய்க் கொடுத்தால், சுமார் நூறு ரூபாய் கொடுப்பார் அல்லது ஆயிரம் ரூபாயே கொடுப்பதாக வைத்துக் கொள்வோம். மேலப்பண்ணை முதலியார் சுமார் ஒரு லக்ஷம் ரூபாய்க்கு ஐவேஜியுள்ள பெருத்த தனிகர், மிகுந்த கண்ணியம்